பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

31


முதுமை வயதுகளில் வரும்
மூட்டு, முதுகு, கழுத்து வலிகள்
நீங்கி நலமுடன் வாழலாம்!

கர மக்களை விட கிராம மக்கள் உழைப்பாளிகள் உடல் நரம்புகள் புடைக்கப் புடைக்க உழைப்பவர்கள்! வியர்வை சொட்டச் சொட்ட உழைத்து முன்னேறும் திறமை பெற்றவர்கள்.

கிராம மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடி பிரிவினர்கள் அனைவரும், விவசாயம், கால் நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு மீன் வளர்ப்பு தொழிற்சாலைகள் தொழில் துறைப் பிரிவுகள், வீடு கட்டுதல், காடுகளில் வேட்டையாடுதல், மலைகளிலே தேயிலை, காபி, ரப்பர் மற்ற பிற காய்கறி தோட்டப் பணிகளைச் செய்தல் போன்ற எத்தனையோ வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி உழைக்கும் வலிமை பெற்றவர்கள்.

கோழி கூவும் முன்பு எழுந்து, ஏர் கலப்பைகளைத் தோளில் சுமந்து, எருதுகளை ஒட்டிக் கொண்டு வயற்காடுகளிலே சென்று உழைக்கும் கிராம மக்கள், கோட்டான் கூவும் போது துங்கப்போவது வழக்கமாக உள்ளது.

இது மாதிரியே மேலே குறிப்பிட்ட தொழிற் பிரிவுகளிலே பணியாற்றுவோர் எல்லாம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்பவர்கள் என்றால் அதிகப்படியான பெருமைக்குரிய வார்த்தைகள் அல்ல.

உழைக்கும் தொழிலே தெய்வம் என்று நம்பி, நாள் முழுவதும் நாயாய், பேயாய் அலைந்து அலைந்து வேலை செய்யும் உழைப்பவர்கள் தான் கிராமத்து மக்கள்.