உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்லைநீங்கி நலமுடன் வாழலாம்

15

இந்தப் பாம்பு எதிர்ப்புச்சக்தி மருந்தைக் கடிபட்டவரின் உடலிலே செலுத்துவதற்கு முன்னால், இந்த மருந்து கடி பட்டவர் உடலுக்கு ஏற்றதா? பொருந்துமா? என்பதைச் சோதனை செய்து பார்த்துத் தான் செலுத்த வேண்டும். ஏனென்றால், சிலருக்கு அவரது உடலுக்குப் பொருந்தாமலும் இருக்கும். பொருந்தாத உடலுக்குள் அந்த மருந்தை செலுத்தினால், மரணம் கூட பின் விளைவாக வந்து சேர்ந்துவிடும்.

வேறு சிலர், பாம்பு கடித்த இடத்தில் கூட இதே மருந்தைச் செலுத்தி விஷத்தை முறித்து விடுகிறார்கள். அப்படிச் செய்யும் போது அடுத்தபடியாக ரண ஜன்னி வராமல் இருப்பதற்குரிய தடுப்பு ஊசியையும் உடனே போட வேண்டும்.

பாம்பு கடிபட்டவரின் நாடித் துடிப்புகள். இரத்த ட்டத்தின் அழுத்தம் அவர்களது சிறுநீர் அதாவது மூத்திரள் அளவு, இரத்த செல்களின் அளவு, தாது உப்புக்களின் நிலை, இதயம் இயங்கும் நிலை, இரத்த உறை பொருள்களின் அளவு சுவாசப் போக்கு. நரம்புகள் செயல்படும் நிலை, சிறு நீரக இயக்கம் ஆகியவற்றை எல்லாம் உடனுக்குடன் எச்சரிக்கையாகச் சோதனைச் செய்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்தச் சோதனைகள் மிகவும் முக்கியமானவையாகும்.

பாம்புக் கடித்த இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். அந்த இடத்தில் உள்ள அழுக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

பாம்புக் கடித்த இடத்தில் வலி இருந்தால், அந்த வலியைக் குறைத்திட ஆஸ்பிரின், மெப்ரிடின் போன்ற மருந்துகளையும் போடவேண்டும்.