பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


இவ்வாறு இறுக்கமாகக் கட்டும் கட்டு, எப்படி இருக்க வேண்டும் என்றால், கட்டப்பட்ட இடத்தில் நமது ஒரு விரலை விட்டால், அது உள்ளே போகின்ற அளவுக்கு அந்தக் கட்டு கொஞ்சம் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

கிராமப்புறங்களிலே உள்ள மக்களுக்குப் பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தைக் கத்தியால் கீறுவார்கள். கீறப்பட்ட இடத்திலே வாயை வைத்துப் பாம்பின் விஷநீரை உறிஞ்சி வெளியே எடுத்துத் துப்புவார்கள்.

பாம்பு கடித்த இடத்திலே ஐஸ் கட்டியை வைத்து கடிபட்ட இடம் மரத்துப் போகச் செய்வார்கள்.

ஆனால், இந்த முதலுதவிச் செயல்களால் எந்தவிதப் பயனுமில்லை என்று பாம்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு தற்காப்புச் செயல்களைச் செய்வதால், இரத்த ஓட்டம் பாதித்த பகுதியில் உள்ள அதன் அணுக்கள் இறந்து விடுகின்றன.

பாம்பு கடித்தவரை முதலில் காற்றோட்டமான இடத்தில் உட்கார வைக்க வேண்டும். பிறகு, எந்தத் தாமதமும் செய்யாமல், உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவமனை சென்றதும், பாம்புக் கடித்தவரின் உடல் விஷத்தை எதிர்க்கும் சக்தியுள்ள A.S.V. என்ற மருந்தை டாக்டர் கொடுக்கும்போது பாம்பு விஷம் முறிந்துவிடும்.

அந்த A.S.V. என்ற மருந்துதான் பாம்பின் விஷத்தை முறிக்கக் கூடிய ஒரே மருந்து அந்த மருந்துக்குப் பாம்பு விஷத்தை முறிக்கும் எதிர்ப்பு மருந்து என்று பெயர். இந்த Anti Snake Venom என்ற மருந்து எல்லா பாம்புகளது கடிக்கும் போடக்கூடிய மருந்தாகும்.