பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15 தொல்லை தீங்கி நலமுடன் வாழலாம்

அழுத்தப்பட்டு, பாம்பின் பல்லில் உள்ள துளைகள் மூலமாக அதன் விஷம் உடலுக்குள் போவதில்லை. பாம்பின் வாயில் இருக்கும் டெட்டனஸ் என்ற நோய்க் கிருமிகளும், மற்றும் எண்ணற்ற நோய்க் கிருமிகளும் கடிபட்ட உடலுக்குள்ளே போகின்றன.

பாம்பு கடிக்கும்போது உள்ளே போகும் விஷநீர் கடித்த இடம், உடலின் முக்கிய பாகமான இரத்த நாளங்களிலே கலந்துவிடுகின்றது. பாம்பால் கடிபட்டவரின் உடல் திடத்தைப் பொறுத்து அந்த விஷ நீர் பரவுகின்றது.

ஆனால், அதே பாம்பு ஒரு குழந்தையைக் கடித்து விட்டால் உடனே அந்தக் குழந்தை இறந்துவிடும். காரணம், குழந்தையின் உடல் அவ்வளவு மென்மையானது. அதனால் விஷம் விறுவிறு என்று உடல் முழுவதும் பரவி மரணத்தைக் கொடுத்துவிடும்.

பாம்பு கடித்து விட்டால், கடிபட்ட மனிதன் தனது கால்களையோ, மற்ற உறுப்புகளையோ ஆட்டி அசைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

பாம்பு கடித்து விட்டதும், கடிபட்ட மனிதன் ஐயோ பாம்பு கடித்து விட்டது என்று அலறித் துடித்துக் கொண்டு வேகமாக ஓடினால், அவன் உடலிலே புகுந்துள்ள விஷம் அவனைவிட வேகமாக உடலிலே பரவ ஆரம்பித்துவிடும்.

எனவே, பாம்பு கடிக்கப்பட்டவன், கடிபட்ட பாகத்தின் மேல் பகுதியினை உடனடியாகத் துணியினால் இறுக்கமாக கெட்டியாக, அந்த விஷயம் உடலுள் பரவாதபடி கட்ட வேண்டும். ஏனென்றால், காலிலோ அல்லது உடலின் வேறு பகுதியிலோ ஏறிய விஷம் இரத்தக் குழாயிலுள்ள இரத்தத்துடன் கலந்துவிடாமல் தடுப்பதற்கே இப்படிப்பட்ட கட்டுக்களைத் துணியால் கட்ட வேண்டும்.