பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்

பயப்பட வேண்டிய பயமில்லை என்றும் கேள்விப்படுகின்றோம்.

மேல் நாட்டிலே உள்ளவர்கள், அதாவது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே வாழ்கின்ற மலைவாழ் மக்கள், காட்டுவாசிகள் இந்த வகைப் பாம்புகள் கடித்து மரணமடைவது என்பது மிகமிகக் குறைவு என்று பாம்புகள் என்ற நூல் கூறுகின்றது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் விஷமுடைய பாம்புகள் கடித்து ஆண்டுதோறும் முப்பதாயிரம் காட்டுவாசிகளுக்கு மேல் இறந்து போகிறார்கள் என்று புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பொதுவாக விஷமுள்ள பாம்புகள் மக்களைக் கடிக்கும்போது, அது ஒருவகையான உமிழ்நீரைக் கடித்த இடத்திலே உமிழ்கின்றது. அந்த உமிழ் நீர்தான் விஷமாக மாறுகிறது.

பாம்புக் கடியில் உள்ள இந்த உமிழ் நீரில் பல்வேறு விதமான புரொட்டீன்களும், பல வகையான என்சைம் என்ற பொருட்களும் அடங்கி இருக்கின்றன.

நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற பாம்பு வகைகளின் விஷம் கடிபட்ட மனிதனுடைய இதயத்தை முதலிலே தாக்குகின்றது. பிறகு அந்தக் கடியினால் வெளியாகும் உமிழ்நீர், மனிதனுடைய இரத்தத்திலே கலந்து மனிதன் உடலிலே உள்ள அணுக்களையும் தாக்குகின்றது.

பாம்பின் விஷம் பெரும்பாலும் மனிதனுடைய நரம்புகளைப் பாதித்து விடுகின்றது. அது கடிக்கும்போது உள்ளே போகும் அதனுடைய விஷ நீர்ச்சுரப்பி