பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்லைநீங்கி நலமுடன் வாழலாம்

15


பூட்டுகளிலும், ஒவ்வொரு மூட்டுகளிலும் விஷம் ஏறி, தாங்க முடியாத குடைச்சலையும் வேதனைகளையும் கொடுத்து,துடி துடிக்க வைத்து வாயிலே நுரை தள்ளிச் சாகடித்துவிடும்.

கட்டு விரியன் பாம்புக் கடித்தால் அதைக் குணப்படுத்த மருந்தே கிடையாது என்று கிராமங்களிலே வாழ்பவர்கள் பொதுவாகக் கூறுவார்கள்.

கடல் பாம்புகளால், கடலில் மீன்பிடிக்கப் போகும் மீனவர்களுக்கு ஆபத்து உண்டாகும். ஆனால், இந்தப் பாம்புகளால் மீனவர்கள் செத்தார்கள் என்ற பிரச்சனை இதுவரை நாம் கேட்டது இல்லை.

பறவைப் பாம்புகள், மரத்திற்கு மரம் பறந்து வந்து மனிதர்களைக் கடிப்பது வழக்கம். இந்தப் பாம்பைப் பச்சைப் பாம்பு என்றும், கொம்பேறி மூக்கன் பாம்பு என்றும் கூறுகிறார்கள்.

இந்தப் பாம்பு மனிதர்களைக் கடித்துவிட்டு மீண்டும் மரத்திலே ஏறிக் கொண்டு, அது யாரைக் கடித்ததோ அந்த மனிதனின் பிணம் சுடுகாட்டுக்குச் செல்கிறதா என்று மரத்தின் மீதே இருந்துப் பார்த்துக் கொண்டிருக்கும் என்று கிராமப் புறங்களிலே இன்றும் சொல்லுகிறார்கள்

வேறு சிலர் கொம்பேறி மூக்கன் பாம்புக்கும், பச்சைப் பாம்பு என்று கூறும் இந்தப் பறவைப் பாம்புக்கும் அவ்வளவாக விஷமில்லை. அது கடித்தால், கடித்தவர்களுக்கு மற்ற பாம்புகளுக்குக் கொடுக்கும் மருந்துகளைப் பயன்படுத்தினாலும் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று பாம்பு பிடிக்கும் பிடாரன்கள் சொல்லுகிறார்கள்.

இந்த வகையாக, ஏறக்குறைய 3495 பாம்புகளுக்கு விஷமில்லை. அந்தப் பாம்புகள் கடித்தாலும் உயிருக்குப்