12 முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால்
அந்தப் பாம்பை நாம் சீண்டினால்தான், அதாவது
அடித்தால்தான் அது நம்மைத் துரத்தி வந்தும் கூட கடிக்கும்
அப்போது சாவு என்பது நிச்சயமாக ஏற்படலாம்.
அதனால் தான், படம் எடுத்தாடும் அந்தப் பாம்பை நமது கடவுளான சிவபெருமான், தனது கழுத்திலே அணிந்து, அது மனிதனை ஒன்றும் செய்யாது என்பதற்கு அடையாளமாக அணிந்து காட்டியுள்ளார் என்ற பாடத்தை நாம் பெற வேண்டும்.
நல்ல பாம்புக்கு நாமம் போட்டிருப்பது போல ஒரு படம் அதற்கு உண்டு. அதை அடிக்க நினைத்தால், அல்லது தொட்டால் நம்மீது அது சீறிச்சீறி படம் எடுத்து ஆடிக்கொத்த ஆரம்பிக்கும்.
இந்தக் காட்சியை, பாம்பாட்டி வித்தைகளைக் காட்டும் நகர வயிற்றுப் பிழைப்பாளர்களிடம் நாம் பார்க்கலாம். அல்லது பாம்புப் பிடாரன்கள் மூலமாகவும் காணலாம்.
நல்ல பாம்பு ஒருவேளை நமது கண்ணில் தெரிந்து விட்டால் கூட நாம் ஒதுங்கிச் சென்று விடுவோமேயானால், அந்தப் பாம்பும், நல்ல பாம்பு போல ஓடிவிடும். நமது விஷயத்தில் அது குறுக்கிடாது.
விஷமுடைய மற்றப் பாம்புகள் எவை என்றால், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன் கடல் பாம்புகள், பறவை பாம்புகள் ஆகியனவாகும். இவைஎல்லாம் கடித்தால் நிச்சயமாக இறக்கவே நேரிடும்.
கட்டு விரியன் பாம்பு உடல் முழுவதும் திட்டுத் திட்டான கோடுகளால் கட்டுக் கட்டாகக் காட்சி தரும்.
இந்தக் கட்டுவிரியன் மனிதனைக் கடித்துவிட்டால், மனித தேகத்தின் ஒவ்வொரு கட்டுகளிலும், ஒவ்வொரு