18
முதுமைக் காலத் தொல்லை,பூச்சிகளினால் ஏற்படும்
பாம்புக் கடியினால் பாதிக்கப்பட்டமனிதனின் உயிரைக் காப்பாற்றிட இதுதான் முக்கியமான சிகிச்சை முறைகள். இவற்றை உடனடியாகச் செய்தால் பாம்புக் கடி விஷத்தில் இருந்து கடிபட்ட மனிதனைக் காப்பாற்றலாம்.
பாம்புக் கடிப்பது என்பது நகரங்களில் அவ்வளவாக ஏற்படாது. ஏனென்றால், நகரங்களில் பாம்பு அதிகமாக நடமாடாது. அது பதுங்கி வாழக்கூடிய அளவுக்கு அடர்த்தியான மரம் செடி கொடிகள், இருண்ட இடங்கள், புற்றுகள், அதிகமாக இருக்காது. அதனால், பெரும்பாலும் பாம்புகள் நகரத்திலே இருக்காது. -
பாம்புகள் கிராமத்திலே அதிகமாக வாழக்கூடிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கேதான் பாம்புகள் வழக்கூடிய இட வசதிகள் அதிகமாக இருக்கின்றன. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பார்களே, அதைப்போல புற்றுகளும் பாம்பு வாழும் பிற இடங்களும் கிராமங்களிலேதான் இன்றும் இருக்கின்றன. என்றும் இருக்கத்தான் செய்யும்.
அதனால் பாம்புக் கடிகள், அதிகமாக கிராமங்களிலேதான் ஏற்படுகின்றன. அப்படி பாம்புக் கடி திகழும் போது, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிட போதிய போக்குவரத்து வசதிகள் உடனுக்குடன் இருக்க முடியாது. அப்படி இருந்தாலும், அந்த மருத்துவ மனைகளில் நவீன மருத்துவ வசதிகள் பெரும்பாலும் இருக்காது.
அதனால், சில கட்ட பஞ்சாயத்துக்காரர்கள். அல்லத பூசாரிகள் அல்லது நாட்டுப்புறவைத்தியர்கள் பாம்புக் கடிக்கு வைத்தியம் செய்து வருகிறார்கள்.
அந்த வைத்திய முறைகளால் சிலர் உயிருக்கு ஆபத்து வராமலும் இருக்கலாம். அல்லது மரணம் ஏற்பட்டாலும்