பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

17


ஏற்படலாம். அப்படி ஏற்படும் மரணத்துக்கு, விதி வந்தது பாம்பு கடித்துச் செத்தான் என்று மூட நம்பிக்கையால் பேசுவார்கள்.

பாம்புக் கடிக்கு வேறு சில கிராம வைத்தியர்கள் பச்சிலைச் சாறு மருந்தும் கொடுப்பார்கள்.இதனால் உயிருக்கு லாபமும் ஏற்படலாம், நட்டமும் ஏற்படலாம். பாம்புக் கடிக்கு இவ்வாறு அந்த கிராம வைத்தியர்கள் தரும் மருந்துதான் என்ன? அதில் உள்ள நவீன கால சிகிச்கைக்குரிய இரசாயன மருந்துதான் என்ன? பாம்புக் கடிக்கு அவர்கள் கொடுக்கும் மருந்து விஷத்தை முறிக்கும் அளவுக்குச் சக்தியுடையதுதானா? என்று எவரும் இன்றுவரை சோதித்து நல்ல முடிவுகளைக் கூறியது இல்லை.

ஆனால், பாம்புக் கடிக்கு இந்த கிராம வைத்தியர்களிடம் மருந்து சாப்பிட்டு உயிர் பிழைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதற்குக் காரணம் என்னவென்றால், விஷமில்லாத பல வகைப் பாம்புகள் இருக்கின்றன. அந்த வகையிலே ஒன்று கடித்து. அந்தக் கடி விஷம் ஏறாததால், கிராம வைத்தியர் மருந்துக்குப் புகழ் ஏற்பட்டிருக்கலாம்.

கடித்தப் பாம்பை, யாராவது அடித்துக் கொண்டு வந்து பார்த்திருந்தால், அந்தப் பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்று அறியலாம். அப்படி எல்லாம் பாம்புக் கடித்ததும் பொறுமை ஏற்படாது.

பாம்புக் கடித்துவிட்டால், அதன் விஷத்தை முறித்திட கிராமத்திலே உள்ள பெரியவர்கள் சிலர் தும்பைச் செடியின் சாற்றைப் பிழிந்து கடிபட்டவன் காதுகளிலே விடுவார்கள்.

பாம்பு தீண்டினாலும் கூட, இதேபோல, தும்பைச் சாற்றைப் பிழிந்து கடிபட்டவன் உடலுக்குள்ளே செல்லுமாறு.