18
முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்
குடிக்க வைப்பார்கள். வேறு சிலர் தும்பைச் செடி இலையின் விழுதுகளைக் கொடுத்து மெல்லவும் சொல்வார்கள்.
வேறு சில கிராமத்து மக்கள், பாம்புக் கடித்த இடத்தைக் கத்தியால் கீறி, இரத்தத்தை வெளியே வரச் செய்து விஷம் வெளியே பின்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வார்கள்.
எனவே, சில கிராமங்களில் தும்பைச் செடியை, பாம்பு கடி முதலுதவிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படிப்பட்டாகிராம வைத்திய முறைகளால் சிலர் உயிர் பிழைத்துக் கொள்ளுவதும் உண்டு. ஆனால், இது பாம்புக் கடிக்குரிய சிகிச்சைக்கு உத்தரவாதமான மருத்துவ முறை அல்ல. ஏதோ, காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை' போன்றது தான்.
கிராமங்களிலே வாழுகின்ற மக்கள், பாம்புக் கடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற மன பீதியிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மன பீதியை, குழப்பத்தை முதலிலேயே தூக்கி எறிய வேண்டும். மன தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
பாம்புக் கடி என்றதும் அலறி ஒடி அழுது கொண்டிருக்கக் கூடாது. கடிபட்டவருக்குரிய உறவினர்கள், நண்பர்கள் அவருக்குத் தைரியம் கூறி மன ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பாம்புக் கடிபட்டவனைவிட, அருகே சூழ்ந்திருப்பவர்கள்தான் அவனுக்கு மரண பயத்தை உருவாக்குவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கிராம மக்களுக்குள் இப்படிப்பட்ட வதந்தி மனப்பான்மையோ, அதைரியக் குழப்பமோ வரவே கூடாது