தொல்லை. நீங்கி நலமுடன் வாழலாம்
19
இந்தக் காலம், விஞ்ஞானம் வளர்ந்து வரும் காலம். அதிலும், மருத்துவ விஞ்ஞானம் பலவித அற்புதங்களைச் செய்து வரும் காலம். இக்காலத்தில் எல்லாவித நோய்களுக்கும், நோயால் வரும் ஆபத்துக்களுக்கும் மருந்து வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுவிட்ட அருமையான காலம்.
பாம்புக் கடிக்கு மருத்துவ முறையினால் மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தி விஷங்களை முறிக்கும் எல்லாவித வசதிகளும் பெருகிவிட்ட காலம்.
கிராம மக்கள், இந்த மருத்துவ விஞ்ஞானதைப் பெறும் அறிவைப் பெற வேண்டும். பாம்புக் கடித்தால், கடிபட்டவனை உடனே நல்ல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் கூடிய மனப் பக்குவத்தைப் பெறவேண்டும்.
மருத்துவமனை டாக்டரிடம் பாம்பு கடிக்குரிய விவரங்களைக் கேட்டு அறிய வேண்டும். அதற்குரிய மன தைரியத்தை, ஒவ்வொரு கிராம மனிதனும் பெற வேண்டும். அப்போதுதான், கிராமம் மருத்துவத் துறை அற்புதங்களை அனுபவிக்க முடியும்.
எனவே, பாம்புக் கடியைக் கண்டு கிராம மக்களோ, மலைவாழ் மக்களோ பயப்படக் கூடாது. உடனடி மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றிட மருத்துவமனைக்குப் போகும் முயற்சியை மேற்கொண்டால், பாம்புக் கடியை நாம் வெல்லலாம் உயிர் மீளலாம் என்ற தைரியத்தோடு கிராம மக்கள் வாழ வேண்டும்.
✽✽✽✽