உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

23


மனமில்லாமல், பெருமைக்காக, போலி கெளரவத்திற்காக, பகட்டு படாடோபத்திற்காக, தாய் மொழிக்குத் துரோகம் செய்து விதேசிப் பள்ளிகளுக்குப் பணத்தைக் கொட்டிப் பாழ்பட்டு வருகிறார்கள் என்றால், 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் ஆட்சியிலே ஆங்கில இன்பம் எப்படிக் கரையுடைந்த கடலாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலே ஆங்கில வெறியின் கோர உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

வ.வே.சுப்பிரமணிய ஐயரின் தந்தையான வேங்கடேச ஐயர் ஒர் ஆங்கில மோகியாக இருந்தார். எனவே, தனது மகனுக்கும் ஆங்கிலம் கற்பிக்க விரும்பினார்.

அன்றைக்கு இந்திய மக்களிடம் பற்று இருந்தது; ஆனால், மெக்காலே பிரபு திணித்த வயிற்றுப் பிழைப்புக்கான இங்கிலீஷ் குமாஸ்தா கல்வி முறை என்ற பேய் அவர்களை நினைத்தபடி ஆட்டிப் படைத்துக்கொண்டு இருந்தது. சோறுதான் பிழைப்பு என்று அவர்கள் எண்ணினார்களே தவிர, மானம் அதைவிடப் பெரியது என்ற நினைப்பே அவர்கள் நெஞ்சில் இடம் பெறவில்லை.

ஆங்கிலேயரையும், அவர்கள் ஆட்சியையும் நமது இந்திய மக்கள் வெறுத்ததும் உண்மைதான். ஆனால், சோற்றுக்காக மக்கள் ஆங்கிலேயர்களிடம் பய பக்தியுடனும், அடக்க ஒடுக்கத்துடனும் ஆமைபோல வாழ்ந்து வந்தார்கள் என்பதும் உண்மைதான்!

இப்போது கான்வெண்டில் படிக்கும் தங்களது பிள்ளைகளிடம் அக்கறை காட்டும் இன்றைய பெற்றோர்களைப் போல, அப்போதும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

ஒருவேளை அப்படி இங்கிலீஷ் படித்து விட்டால், இங்கிலீஷ் கான்வெண்டிலே படிக்கும் பிள்ளைகட்கு அரசு பணிகளிலே இரட்டைச் சம்பளமா கிடைக்கிறது? இல்லையே, சாதாரண ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/25&oldid=1080731" இலிருந்து மீள்விக்கப்பட்டது