உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வ.வே.சு.ஐயர்


விளங்கும் மேற்கூரையில்லா வெஃகாளி அம்மனது திருக் கோயிலின் அற்புதங்களையும் கேட்டு இன்புறலாம்!

இவை போன்ற சிறப்புக்கள் பல பெற்ற திருச்சிராப் பள்ளி நகரின் ஒரு பகுதியாய் விளங்கும் சிற்றூர் வரகநேரி. இங்கே வேங்கடேச ஐயர், காமாட்சி அம்மையார் எனும் தம்பதியருக்கு 2.4.1881-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். வரகநேரி வேங்கடேச சுப்பிரமணியம் என்பவர்தான், பிற்காலத்தில் தமிழ் வரலாற்றிலே வ.வே.சு.ஐயர் என்று சுருக்கமாக மக்கள் இதயத்திலே இடம் பெற்றார்!

சுப்பிரமணியம் பிறந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்போது நாம் வாழ்வதோ இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இந்த நூற்றாண்டிலே வாழும் படித்தவர்கள், உலக நாகரீக வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டவர்கள், நமது நாட்டை அடிமைப்படுத்தி, இந்திய மக்களைக் கொடுமையாக, ஆட்சி செய்தவனை 1947-ஆம் ஆண்டு நாட்டை விட்டே விரட்டியடித்து, சுதந்திரம் பெற்ற பிறகும்கூட, இன்றைய மக்கள் இங்கலீஷ் மோகவெறி பிடித்து அலைகிறார்கள் என்றால், ஆட்டுத்தோலுக்கு இடம் கேட்டு வியாபாரம் செய்ய வந்த இங்கிலீஷ்காரன் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த போது இங்கிலீஷ் வெறி எப்படி இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்.

ஆங்கிலேயன் ஆட்சியை விட்டு ஓடிப்போய், 54 ஆண்டுகள் ஆனபிறகும் கூட நம்முடைய பிள்ளைகள் இன்றைக்கும் இங்கிலீஷ் கான்வெண்ட் பள்ளிகளிலே படிப்பதையே ஒரு கர்மமாய் கருதி நடந்து வருகிறார்கள். அவர்களது செல்வங்கள், பெற்றோர்களை மம்மி, டாடி என்று அழைப்பதிலே பேரானந்தப்பட்டு, அதற்காக ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றார்கள். சுதேசி பள்ளிகளிலே அவர்களது குழந்தைகளைப் படிக்க வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/24&oldid=1080728" இலிருந்து மீள்விக்கப்பட்டது