உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதய உணர்ச்சி

11


நாட்டாரோடு அக்காலத்தில் நம் பாண்டி நாட்டிலிருந்த மன்னர்கள் பலவிதத்தில் சிநேக பாவத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்து வந்தனர்.

அந்தச் சாம்ராஜ்யத்திற்குத் தலைநகர் ரோமாபுரி. அதில் செங்கோலோச்சிய சக்ரவர்த்திகளுள்ளே தலை சிறந்தவன் மார்க்க ஒளரேலியன். அவன் பல சமயங்களில் எழுதி வைத்திருத்த ஞாபகக் குறிப்புக்களே இப்பொழுது ‘மணிமொழிகள்’ என்னும் பெயரால் வழங்கி வருகின்றன. அந்த ஞான மலர்களில் சிலவற்றையே இந்நூலில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறேன். அவைகளில் எத்தகைய உயர்ந்த ஞானமும், ஒழுக்க போதமும், ஆன்ம உறுதியும் நிறைந்திருக்கின்றன என்பதை வாசிப்போர் எளிதில் அறிந்துகொள்வர். சக்ரவர்த்தி மார்க்க ஒளரேலியன், உயர்ந்த ஞானத்தைச் சிந்தித்ததோடு நில்லாது, அதன்படியே ஒழுகியும் வந்தவன். உலகில் பெரியோரின் உயர்ந்த ஒழுக்க நடை என்றும் நமக்கு உறுதி பயக்கும். அப்பெரியோரும் அரசராய், அளவற்ற செல்வமும், அகன்ற ராஜ்யமும், அவற்றால் உண்டாகும் சுகானுபவங்களும் தங்களுக்கிருந்தும் அவைகளில் பற்றின்றித் தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்திருப்பின், அத்தகையவரின் சரிதையால் நாம் பெறும் நன்மையை அளவிடமுடியாது. ஆகையின் மார்க்க ஒளரேலிய சக்ரவர்த்தியின் மணிமொழிகள் நம்மால் பெரிதும் போற்றத்தக்கன.

ஒளரேலியன் ரோமாபுரியில் கிறிஸ்து பிறந்தபின் 121-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தான். அவன் தந்தை அன்னிய வேரன் என்பவன் அந்நகரின் தலைமை நீதிபதியாய் இருந்தான். மார்க்கன் பிறந்து மூன்று மாதத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/13&oldid=1123689" இலிருந்து மீள்விக்கப்பட்டது