உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உண்டு. இத்தகைய பண்புடையவர்களே எல்லாம் உணர்வால் ஒன்றித்து வாழச் செய் வ தே வாழ்க்கை; அதுவே குடும்பக்கலை. இதற்குத் தன் நலமற்ற தன்மையே தகுதியாக அமைகிறது. தன்னையே தலைவனுக்கிக் கொள்ளாமல், பிறரையே அடிமையாக்கிக் கொள்ளாமல், தலைவன க வு ம் அடிமையாகவும் இணங்கிவாழப் பயில்வதே வாழ்க் கைக் கலை. அ ட ங் கத் தெரிந்தவர்க்குத்தானே ஆளத் தெரியும் ! ஆகையில்ை, இந்தப் பயிற் சியை - அடங்கும் பயிற்சியை - ஆளும் பயிற்சியை நமக்கு அளிக்கும் இடம் குடும்பமேயல்லவா? நல்ல தாய் நல்ல பயிற்சியாளராக இருப்பதில் வியப்பில்லையே! பயிற்சியிலே பண்பட்டவள் பயிற்சிக் களத் தின் இயக்குனராகிருள்; ஆம். பல கலைகளைப் பயில்விக்கின்ற பயிலப் பழக்குகின்ற பயில வாய்ப்பளிக்கின்ற இடம் பல்கலைக்கழகமல்லவா? பலவேறு குணங்களையுடைய குடும்பத்தினரை ஒருங்கே ஒரே குறிக்கோளுடன் இயங்கி வாழ. வைப்பவள் - வழிகாட்டுபவள் தாய். அ வ ளே குடும்பத்தின் இயக்குனர். அடக்கம், பொறுமை, அன்பு, ஆற்றல் இவையே அந்தத் தலைவியின் - தாயின் - இயக்குகனரின் - அடிப்படைப் பண் புகளாக - தகுதிகளாக- அமைகின்றன. பலவேறு கோக்குகளையும் போக்குகளையும் முறைப்படுத்தி - வழிப்படுத்தி - உயர்ந்த கல்வாழ்வைப் பெறும் குறிக்கோளை - .ெ கா ள் கை யை வித் தி ட் டு