உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : 8. கண்ணன் தனது திருக்கையால் ஆண் டாள் பாதத்தை அம்மிமேல் வைத்தல். 9. ஆண்டாளின் உடன்பிறந்தார் கண்ணன் கை மேல் ஆண்டாளின் கையை வைத்துப் பொரி முகந்து அட்டுதல். 10. குங்குமம் அப்பிச் சாந்து பூசி மங்கல வீதி வலம் செய்வித்து மணமக்கள் இருவரையும் மஞ் சனம் ஆட்டல். (இவ்வழக்கம் இப்போது எங்கே னும் உண்டா ? இப்போதும் நீராட்டு மட்டும் உண்டு.) . 11. மாப்பிள்ளை தன் மைத்துனருக்கு மோதி ரம் அணிவித்தல். (இவ்வழக்கங்கள் இப்போதும் உண்டு.) இவ்வளவு விரிவான சடங்குப்பட்டியலில் தாலி கட்டல் இ ல் லை! இங்கிலையையும் திருமங்கை மன்னன் பாடற்குறிப்பையும் ஒப்பு கோக்கும் போது கி. பி. 8-ஆம் நூற்றண்டில் தாலி கட்டும் வழக்கம் ஆங்காங்கே நுழைந்திருக்கும்-எல்லோ ரும் ஏற்கும் சடங்காய் ஏற்றம் பெற்றிராது என்று எண்ணத் தோன்றுகிறது. கி.பி. 9-ஆம் நூற்ருண்டினதாகக் கருதப்படும் சூளாமணியிலும் 1. பெண்ணின் தங்தை மணமகளை மணமகனுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தல், 2. எரி வளர்த்தல், 3. மணமக்கள் தீ வலம் வருதல்," 4. அம்மி மிதித்து அருந்ததி காட்டல்,' ஆகிய சடங்குகள் கூறப்படுகின்றன. (இவ்வழக்கங்கள் இப்போதும் உண்டு.)