38
அதில் குடைவுகள், பெரிய மலைத்தொடர்கள், தாழ்வாக அமைந்துள்ள சமவெளிகள் முதலியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர, அதன் விரிவான முதல் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.
காட்டாகச் சிலோனுக்குத் தென்கிழக்காகத் தரையிலிருந்து 14,400 அடி உயரத்திற்கு எரிமலைத் தொடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறித்துமஸ் தீவுகளுக்குத் தெற்கே 219 மைல் தொலைவில் எரிமலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 2500 மீட்டர் ஆழத்திலும் மற்றென்று 3700 மீட்டர் ஆழத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வானிலை
வானிலை பற்றி நிரம்பச் செய்திகள் கிடைத்துள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று, வட கிழக்குப் பருவக்காற்று, கோடைப் பருவக்காற்று முதலியவை ஆராயப்பட்டுள்ளன. கோடைப் பருவக்காற்று மிக்க வலிமை வாய்ந்தது. இது வட அரைத்திரளைப் பகுதியின் வானிலையைப் பாதிக்கிறது. மேலும், கதிர்வீச்சு அளவீடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றின்படி, அரபிக் கடலிலும் செங்கடலிலும் நேரடிப் பகலவன் கதிர் வீச்சில் 15% முதல் 23% வரை நீராவியினாலும் வாயுவினாலும் உறிஞ்சப்படுகிறது என்பது வெளியாகியுள்ள உண்மையாகும். மேகக் கூட்டங்களிலிருந்து நிலாக்களின் வாயிலாகப் பெற்ற செய்திகளைக் கொண்டு, முழுக்கடலிலும் விழும் பகலவன்