45 செய்து கணவன் விரும்பத் தக்க மனைவி ஆகுக" என்று வாழ்த்தி (மணநீராட்டினர்). அகம்-136 அறிவிக்கும் சிறப்புச் செய்திகள் வருமாறு : 1. இறைச்சி கலந்து ஆக்கப்பட்ட வெண் சோற்று (விருந்து நடைபெற்றது). (இவ்வழக்கம் பெரிதும் இப்போது இல்லை.) 2. மனமனை அணி செய்யப்பட்டு இறைவழி பாடு நடைபெற்றது." - 3. மணமுழவும் முரசும் முழங்கின." 4. வாகையிலை அ று கி ன் கிழங்கிலுள்ள அரும்புகளோடு சேர்த்துக் கட்டப்பெற்ற வெண் னுரல் தலைவிக்குக் காப்பாகச் சூட்டப்பட்டது." 5. சுற்றத்தார் தலைவிக்குத் துய உடைகளை அணிவித்தனர்." 6. உறவினர் தலைவிக்குப் பல அணிகளை அணிவித்து, அங்ங்னம் அணிவித்ததால் உண் டான வியர்வையை ஆற்றினர்,8 (இப்போதும் இவ்வழக்குகள் உண்டு.) இப்பாடல்கள் தரும் செய்திகளுள் இக்காலத் திற்கும் பொருந்தும் எண்ணங்கள் சில வருமாறு : 1. இப்போதும் திருமணக் கோயில் விழாக் களில் புதுமணல் பரப்பப் பெருகின்றன.
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/46
Appearance