பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஹிராடெடஸின்



உலகப் பண்பாட்டின் சிறந்த நகரங்களுள் ஒன்றாக விளங்கிய தென்ஸ் நகரத்து வீதிகள் கூடுகின்ற சந்திப்புக்களில், ஹிராடெடஸ் தான் எழுதிய ‘வரலாறுகள்’ என்ற நூலை மக்கட் கூட்டத்தினிடையே படித்துக் காண்பித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தங்களது கையொலிகளை எழுப்பி மகிழ்ச்சியோடு அதனை வரவேற்றார்கள். ஏதென்ஸ் நகரத்தின் பொது நிதியிலே இருந்து அவருக்குப் பத்து டேலண்டுகள் TALENTS, அதாவது 2400 பவுன்களைப் பரிசாக அளித்து மகிழ்ந்தார்கள்.

ஏதென்ஸ் நகரத்து மக்களில் வேறு ஒரு பிரிவினர், ஹிராடெடஸின் ‘வரலாறுகள்’ நூலினது கருத்துக்களைக் கேட்டுக் கையொலி எழுப்பியது மட்டுமல்லாமல், அந்த நூலின் வாசகங்களைத் திரட்டி அந்த நகரிலே நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகிழ்ச்சிப் பொங்கிட ஓதினார்கள் என்றும் வரலாற்றுச் சம்பவங்கள் கூறுகின்றன.

ஏதென்ஸ் நகரத்திலேயே அவர் தொடர்ந்து தங்கிவிடாமல், மேலும் பல சரித்திரச் சம்பங்களைத் தொடர்ந்து திரட்டிட, ஹிராடெடஸ் அங்கிருந்து உலகின் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்! ஆங்காங்கு தான் கண்ட சம்பவங்களையும் சேகரித்து வந்தார்.

இன்றைய ஆப்பிரிக்கா கண்டத்திற்கு அவர் வந்த காலத்தில் நைல் நதி நாகரிகங்களை எல்லாம் அறிந்து கொண்டு, வட எகிப்து நாடு வரை சென்றார். அதே பயணத்தின் போது, ஆசியா, பாபிலோன், சூசா, எக்படன போன்ற நகர்களுக்கும் சென்று வரலாறுகளைத் திரட்டினார். கருங்கடல், பகுதிகளையும், டான்யூப் நதி டெல்டா பகுதி மக்களையும் சந்தித்த பின்பு, கிரிமியா, கோல்கே, புது ஜார்ஜியா, மாநிலங்களுக்கும் சென்றார். சிரியா, திரேசியன், சைரினில், லிபியா, எபிரஸ், திசாவியா, அட்டிகா, பெலபோனீசயா போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று, அந்தந்த நாடுகளின்