உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கவிக்குயில் சரோஜினியின்

வில்லை. சிந்தனையாளன் ஆர்க்கிமிடிசைப் போல வகுப்பிலே அங்கும் இங்கும் அவரே எழுந்து அலைந்தார்!

வகுப்பாசிரியர் கோபம் கொண்டு விடை தேடு என்றால், வகுப்பிலே அங்குமிங்கும் அலைந்து எதைத் தேடுகிறாய்? என்று கேட்டார். சரோஜினிக்கு அவமானமானது. உள்ளம் சோர்ந்தார்!

அந்த சோகத்தைத் தனது நோட்டுப் புத்தகத்திலே சொற்களாக எழுதினார். அந்த அவமானச் சம்பவத்தால் வந்த வார்த்தைகளை அப்படியே நோட்டில் எழுதி ஆசிரியர் இடம் காட்டவே, அவர் கணக்குப் போடு என்றால் கவிதை எழுதுகிறாயே! உனக்கென்ன பைத்தியமா? அல்லது சிந்தினைச் சிக்கலா? என்றார்.

ஆசிரியர், சரோஜினி எழுதிய கவிதையைப் படித்தார்! சிலிர்த்தது அவரது சிந்தனை! உடனே சரோஜினியை வாசித்து, உனக்குக் கணக்கு வராது; அறிவியலுக்கும் உனக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை; போ, கவிதையே எழுது என்று கண்டித்து விட்டார்!

சரோஜினியைப் பொறுத்தவரை, அவரது மனச் சிந்தனைகள் எழிலான புதுக் கருத்துக்கள் பூக்கும் செடிகளாக இருக்கின்றன. இதை மனதிலே பாத்திக் கட்டி வளர்க்கும் ஆர்வமே அசைந்தாடுவதாக ஆசிரியர் உணர்ந்தார்!

மாணவர்கள் மத்தியிலே சரோஜினி வெட்கித் தீ சுடப்பட்டவரைப்போல முகம் சிவந்து, புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினார்; அவருடன் படித்த மாணவிகளும் ஒன்றும் புரியாமல் ஊமைகளாக வெளியேறினார்கன் ஆசிரியரே திகைத்தார்! பாவம்!

கவியுள்ளம் கணிதத்தை நாடாது என்பதால், ஆசிரியர் போ, கவிதை எழுது என்று விரட்டாதக் குறை-