30
பெஞ்சமின் ஃபிராங்ளினின்
தீயணைப்பு வண்டிகள், அதிலே தீயணைக்கும் வீரர்கள், அதற்கான வசதிகளோடு தீப்பற்றிய இடத்திற்கு வந்து, நெருப்போடுப் போராடித் தீயை அணைக்கிறார்கள். எனவே, தீயணைப்புப் படை, அதற்கான நிலையங்கள், அதற்கென ஒரு நிர்வாகத்துறை, எண்ணற்ற தீயணைப்புப் படை வீரர்கள் இருப்பதையும், அதற்கென்ற சம்பளமாக மக்கள் வரி பணத்தில் ஒரு பகுதி செலவழிக்கும் நிதி நிலையையும் நாம் அனுபவித்து வருகிறோம்; இல்லையா?
இந்த நெருப்பணைக்கும் இயந்திரங்கள், அதற்கான நீர் பரிமாற்றத் திட்டங்கள், ஏணியும் கொக்கியும் உள்ள வண்டிகள், இல்லாத அக்காலத்தில், எங்காவது தீப்பற்றிக் கொண்டால் அது பெரும் பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் விளைவித்து வந்ததை பெஞ்சமின் கண்டு வேதனைப்பட்டார். அந்த சோக சம்பவத்தைப்பற்றிய வருணனைகளைத் தனது பத்திரிகையிலே எழுதினார்! சிந்தித்தார்! மக்கள் அறியும்படிச் செய்தார்.
தீயணைப்பு பற்றிய நெருப்புத் தடுப்பிற்கு பல திட்டங்களை வகுத்துக் கொடுத்து அது வளர வழிகாட்டினார் பெஞ்சமின்.
நெருப்புக் ‘கணப்புத் தட்டு’ இறுக மூடியிருக்க வேண்டும்; அப்போதுதான் ஓர் அறையிலே இருந்து மற்றோர் அறைக்கு மக்கள் நெருப்பை எடுத்துச் செல்லலாம் என்ற ஒரு விதி அப்போது மக்களிடையே இருந்தது.
பிலடெல்பியா பட்டினத்தில் எங்காவது தீ பிடித்தால் அதை அணைக்க தீயணைப்புத் தொண்டர் படைக்குழு அமைக்கலாம் என்று பெஞ்சமின் கூறினார். இதன் எதிரொலியாக ஒரு தொண்டர் படையை அமைத்தார். அவர்களிடம் தோல்களால் செய்யப்பட்ட வாளிகளும், தீயணைப்பு பற்றிய பொருட்களை எடுத்துச்சென்றிட ஒரு கித்தான் பையும் அவர்களுக்குச் சொந்தமாக வழங்கப்பட்டிருந்தன.