பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மருத்துவ விஞ்ஞானிகள்


அவருக்கு, அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் சைமி என்பவரின் நட்பும், அறிவுரைகளும், ஆய்வுக் குறிப்புகளை வழங்கும் சூழ்நிலைகளும் உருவாயின.

எடின் பர்க்கில் படித்த ஆண்டுகள் ஏழு போக, மேலும் ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கி, பேராசிரியர் சைமியின் நட்பால் லிஸ்டர் மிகச் சிறந்த மருத்துவர் ஆனார்.

இராயல் இன்பெர்மரி - இல் ரெசிடெஸ்ட் ஹவுஸ் என்ற கிளாஸ்கோ நகரிலுள்ள மருத்துவ மனைக்கு ஹவுஸ் உதவி சர்ஜனாகவும், பிறகு சர்ஜனாகவும் லிஸ்டர் நியமிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றார். இந்தப் பதவிகள் எல்லாம் ஜோசப் லிஸ்டரின் அறிவுத் தகுதிக்கு வழங்கப்பட்ட பதவிகள் ஆகும்.

ஜோசப் லிஸ்டரின் திறமைகளை நன்குணர்ந்த பேராசிரியர் சைமி, தனது அருமைச் செல்வி ஜென்ஸ் சைமி என்பவரை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். கி.பி. 1856-ஆம் ஆண்டில் அவர்களுக்குத் திருமணமாயிற்றே தவிர, அந்த தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு ஏதுமில்லை.

இருந்தாலும் 37 ஆண்டுகளாக அவர்கள் மகிழ்ச்சியோடும், லிஸ்டருக்கு விஞ்ஞானித் துறையில் உதவியாக இருக்கும் அளவுக்கு ஜென்சும் இணைந்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தார்கள். லிஸ்டரின் விஞ்ஞானத் துறை எழுத்துப் பணிகளை ஜென்ஸ் சைமியே கவனித்து வந்தார். வளர்பிறைப் போல் குடும்பம் வளர்ந்து வந்தது.

ஜோசப் லிஸ்டரது திறமையைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பேரரசி விக்டோரியா, கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக அவரை நியமித்தார்.

இந்த அரசு பல்கலைக் கழகத்தில் அவர் சேர்ந்த பிறகுதான் அறுவை சிகிச்சைத் துறையில் பல வழிமுறைகளை ஆராய்ந்து வெளியிட்டார்.

நோயாளிகளுக்கு வரும் வியாதிகள் மிகக் கொடியவைகளாகவும், நோயாளிகளையே பயமுறுத்துவதாகவும், ஏன்