புலவர் என்.வி. கலைமணி 27
ஆய்வரங்கம் அமைத்தாற்போல், பொன்மனச் செம்மலின் கொடைமடைப் பெருமைகளைக் கொடி கட்டிப் பறக்கச் செய்திட, எம்.ஜி.ஆர். கோட்டத்தினுள்ளே ஓர் ஆய்வு மன்றம் அமைத்திருக்கின்றாயா?
வரலாற்றாசிரியர்களால் 'பெளத்தத்தின் மார்ட்டின் லூதர்' என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நாகார்ச்சுனர், சித்தார்த்தரின் சித்தாந்தங்களிலே காலத்திற்கு ஏற்றப் புதுமை களைப் புகுத்தப்பட வேண்டுமென்று, தனது நாவன்மையை அன்று நாட்டினாரே, அதைப்போல ஏழை மக்களுக்கு எவ்வாறு, எப்படி உதவி புரிய வேண்டுமென்பதற்காக, உனது எம்.ஜி.ஆர். தோட்டத்திலே இராம கிருஷ்ண பரமஹம்சரின் மிஷனைப் போல ஒர் எம்.ஜி.ஆர். மிஷின் அமைந்திட இன்று வழி செய்திருக்கின்றாயா?
கனிஷ்கர் காலத்தில், இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட கிரேக்க - ரோமானியச் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு, இந்தியத் தத்துவத்தில் கிரேக்கத் தோற்றங்களால் வடிக்கப்பட்ட காந்தாரக் கலை அழகு சிலைகளோ, சிற்பங்களோ, உனது மக்கள் திலகம் கோட்டத்திலே மன ஆறுதலுக்காகவாவது செதுக்கப்பட்டு உள்ளனவா?
சிற்பம், ஒவியம், இசை, இலக்கியம் இவற்றில், சித்ரகாரப் புலியாக விளங்கிய முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக் குகைக் கோயிலாகவா, அந்தக் கோட்டத்தை உருவாக்கியிருக்கிறாய்?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்துள்ள உனது எண்ணக் கோட்டம், பல்லவ மா மன்னனான விசித்திர சித்தன் அமைத்த சித்தன்ன வாசல், தாமரைக் குளம் ஒவியங்களில், ஒன்றாவது அமைக்கப்பட்டதுதான்ா?
நீ அமைத்துள்ள பொன்மனச் செம்மலின் சிந்தனைக் கோட்டத்திலே, பல்லவச் சக்கரவர்த்தி நரசிம்மவர்மன் நிர்மாணித்த எழில்மிகு மாமல்லபுரத்துக் கடற்கரை பாறைக் கோயில் போல, ஏதாவது சிறுசிறு அழகாலயங்கள் நிறுவப் பட்டுள்ளனவா?