பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝铬 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

இத்தாலி நாட்டில் வாழ்ந்த ஒவிய, சிற்ப நுண்கலை வித்தகர்களான, பிரமாண்டே, ரபேல், பல்லாடியோ, மைக்கேல் ஆஞ்சலோ போன்ற சிறந்த கட்டிடக் கலை ஞானிகளாலும் அது நிர்மானிக்கப்பட்டது அன்று:

பிரான்ஸ் நாட்டு சிற்பப்பிரிய வேந்தன், முதலாம் பிரான்சிஸ் என்பவரால், அழகு நகரான பாரிசில் நிறுவப்பட்ட லோவ்ரி (LOURE அரண்மனை போன்று அமைந்த கோட்டமுமல்ல!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கல்லறை மண்டபச் கவர்களிலே, இத்தாலி நாட்டு வியானர்டோ-டா-வின்சி வரைந்த கல்லறை ஓவியமான இறுதி சாப்பாடு வரையப்பட்டிருக்குமா? என்னக் கேட்காதீர்கள்:

ஒவியக் கலை மாமன்னரான மைக்கேல் ஆஞ்சலோ, சிற்பக் கலை சித்தர் அவர் என்பதை நிரூபிக்க, புனித டேவிட் என்ற ஞானியின் திருவுருவத்தை சிலையாக வடித்துப் புகழ் பெற்றாரே, அதே போன்று, மக்கள் திலகத்தின் சிலையைச் செதுக்கி நிறுத்தப்பட்டதும் அன்று:

வாட்டிகன் சிட்டியின் வனப்பு மிகும் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள சிஸ்டைன் ஆலயத்தின் மேற்கூரையில், உலகின் தோற்றம் முதல் பிரளயம் வரையுள்ள விவிலியக் கதையை, மைக்கேல் ஆஞ்சலோ ஒவியங்களாகத் தீட்டியுள்ள மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்குமா? என்ற கேள்வியை எழுப்பாதீர்கள்!

இன்றைய இந்திய தேசியத்தின் நாயகன், மாமன்னன் அசோகன், தான்் செதுக்கியக் கற்றுண் பாறைகளிலே, தர்ம நெறிகளை கல்வெட்டுக்களாகச் செதுக்கி வைத்தான்ே!அதுபோல, மக்கள் திலகத்தின் மாண்புறு நெறிகள் ஏதாவது செதுக்கப்பட்டுள்ளனவா? நான் ஊமையாக நிற்கின்றேன்!

உலும்பினி நந்தவனத்திலே பிறந்த கெளதமருடைய கொள்கைகளை விவாதித்திட, இரண்டாம் அசோகன் என்று வரலாற்றால் புகழப்படும் பேரரசன் கனிஷ்கன், அங்கே ஒர்