உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 25

பாவம்....! நாளுக்கு நாள் அதைப் பிறையாக்கி மகிழ்கின்றாயே! செய்ந்நன்றியா இது?

துப்பாக்கியால் தன்னைச் சிதைத்தவனையும், "அண்ணே! என்ன காரியம் செய்தீங்க...!" என்ற அதிர்ச்சிக் கலக்கத்தோடு அன்புச் சொற்களைக் கொட்டியக் கண்ணியனைக் காண வந்தாயா?

தமிழகத்தின் பண்பாட்டுத் தலைமகனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதால், தனது கட்சிக்கு அவர் பெயரையே, சூட்டினார்.

அக் கட்சியின் கொடியிலே அந்த அறிஞர் திலகத்தையே சின்னமாகப் பொறித்தார்:

சாகும் வரை தான்் பேசும் ஒவ்வொரு கூட்டததின் முடிவிலும், 'அண்ணா நாமம் வாழ்க’ என முழங்கி, நன்றிக்கு வித்தாக நடமாடிய, அந்த மனிதாபிமானியைத் தேடி அங்குமிங்கும் அலைகின்றாயா, தண்ணிலவே!

ஏ, வானே! வளர வைத்தும், தேய வைத்தும் நீ மகிழ்கின்ற அந்தப் பிறையின் முகத்தில், நன்றிக்கு நனி நல்ல ஒழுக்கமான அண்ணா என்ற ஒளியை ஏற்று, உலகுக்குள் தவழ்கின்ற, அந்த நிலவிலே வள்ளுவத்தைக் கண்டு, கசிந்து, உள்ளம் உருகி, மகிழ்ச்சிக் கண்ணிர் உகுக்கின்றேன்! வேறு என்ன செய்ய, வானமே!

அந்த ஆறுதலைப் பெற்றதனாலே, இந்த எனது எண்ணக் கோயிலைக் கட்டி முடித்திடத் தாமரைக் கோட்டத்து மண்ணிலே, அமர்ந்து, எனது சிந்தனைச் சிற்பங்களைச் செதுக்குகின்றேன்.

எனது சிற்பச் செதுக்கல்களில், இயேசு காலத்துக் கிறித்தவ பாணியான கூரிய வளைவுகள், இரா.

கிரேக்க - ரோமானிய நகரங்களில் காணப்பட்ட வட்ட வடிவுகளாலும் ஆனதாக அமையா!