உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மருத்துவ விஞ்ஞானிகள்



பாலார்டுக்கு உதவியாளராக பணிபுரிந்தபோது, படிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி லூயி தொடர்ந்து நடத்தி வந்தார். ஆய்வில் கிடைத்த உண்மைகளை எல்லாம் முறைப்படுத்தி, தொகுத்து, கட்டுரைகளாக எழுதி, பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். பல்கலைக் கழகம் அதை ஏற்று ஆய்ந்து லூயியிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.



‘டார்டாரிக்’கை - ரேசமிக்; அமிலமாக்கி
உலகப் புகழ் பெற்றார் லூயி!

‘ஒரு நெல்மணி நிலத்தில் விழுந்தால், அது பத்து நெல்மணிக் கதிராக மாறுகிறது.

‘காலணிகளைத் தைக்கும் தொழிலாளி, நாளடைவில் ஒரு நாட்டிற்கே அதிபராகி விடுகிறார்!’

விறகு வெட்டியின் மகன், ஓர் இனத்தின் மனித உரிமைகளுக்கு விடிவெள்ளியாகி, இறுதியில் குடியரசுத் தலைவராகிறார்:

சட்டிப் பானைகளைச் செய்பவன் மகன், காலச் சுழற்சிக் கேற்ப அறிவு பெற்று உலக வரலாற்றை எழுதும் ஆசானாகின்றார்.

மனிதனுக்கு மிகவும் வேண்டியது எது? என்று சிந்தித்த சிந்தனையாளன், சித்தாந்தி - வேதாந்தியாகி, இறுதியில் சைபர் ஆகிறான்; அல்லது மூச்சடக்கும் துறவியாகிறான்!.

‘எறும்புக்கு ஆயுள் எவ்வளவு?’ என்று ஒருவன் வினா எழுப்பினால், அவனிடமே ‘சாவுக்கு முன்பு நாய் ஏன் ஊளையிடுகிறது?’ என்ற எதிர் கேள்வியைக் கேட்டுக் குழப்புகிறார்கள் - குவலயத்தை!