உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

161


வளர்த்தார். பிறகு அந்தக் கிருமிகளையே ஆந்த்ராக்ஸ் நோய் கண்ட ஆடு, மாடுகளின் உடலில் ஊசி மூலம் ஏற்றினார். என்னவாயிற்று தெரியுமா முடிவு?

ஆந்த்ராக்ஸ் வியாதிக்கு அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகளே மருந்தாக அவற்றின் உடல்களிலே ஏற்றியதால், நோய் கண்ட மாடு, ஆடுகள் அந்த நோயிலே இருந்து மீண்டன; விடுதலை பெற்றன; குணமாயின. ஆடு, மாடுகளுக்கும் மட்டுமல்ல; இதே மருந்தைத்தான் பன்றிகளுக்கு வந்த ஆந்த்ராக்ஸ் நோயைப் போக்குவதற்குப் பாஸ்டியர் பயன்படுத்தினார். ஆடு, மாடு, பன்றிக்கு பிடித்த ஆந்த்ராக்ஸ் நோய்களுக்குப் பயன்படுத்திய ஆந்த்ராக்ஸ் மருந்தையே, கோழிகளுக்கு வரும் கழிச்சல் நோய்க்கு; அதாவது - கோழி கால்ரா நோயிக்கும் - ஊசி மூலம் பயன்படுத்தி அந்த நோயை அகற்றினார் லூயி பாஸ்டியர்!

லூயி பாஸ்டியர் இந்த ஆந்த்ராக்ஸ் நோய்க்குரிய ஆந்த்ராக்ஸ் மருந்தால், இலட்சக் கணக்கான ஆடு, மாடு, பன்றி, கோழிகள் ஆந்த்ராக்ஸ் நோய் கொடுமைகளிலே இருந்து காப்பாற்றப்பட்டன; மீட்கப்பட்டன; உயிர் மீண்டன!

இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகள்; தங்களது கால்நடைச் செல்வங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்! ஆந்த்ராக்ஸ் என்ற பேய் நோயை அடித்து விரட்டினார்கள்! நாட்டில் விவசாயமும் பெருகியது! விவசாயிகள் தங்களை வாட்டிய கால்நடை நோய்க் கொடூரத்திலே இருந்து தப்பிப் பிழைத்ததற்குக் காரணம் லூயி பாஸ்டியர் தானே!

ஆந்த்ராக்ஸ் நோய்க்கு மருந்து கண்டு பிடிதகது உழவர்களைக் காப்பாற்றிய லூயி பாஸ்டியரை ஃபிரான்ஸ் நாடு மட்டுமன்று; உலகமே அவரை வாழ்த்தியது! உலக அரங்குகளி லிருந்து எண்ணற்றப் பட்டங்கள் லூயி பாஸ்டியரைத் தேடி ஓடி வந்தன, பாராட்டுதல்களும் வரிசையாக வந்து கொண்டே, இருந்தன.

பிரெஞ்சு விஞ்ஞானக் கலைக் கழகம், அவருக்கு உறுப்பினர் பதவியை வழங்கியது. அறிவியல் வித்தகர்கள்,