உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

డీడీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். போகட்டும்! பல கோடியில் ஒருவராக உலவும் மக்கள் தலைவருக்கு, நீ தரும் உவமை இதுதான்ா?”

அன்று..! அவரை நான் தமிழர் நாகரிகத்திற்குச் சான்றாக ஒடிக் கொண்டிருக்கும் காவிரி நதிக்கு ஒப்பிடுகின்றேன்!

அட...! இலக்கியப் பைத்தியமே! பூமலிந்து கரை சேர்ந்த அமிழ்தத் தமிழோசை தெருவெல்லாம் முழக்கி வரும் தென்றலைக் குளிப்பாட்டும் பொன்னியை யாமறிவோம்!

ஆண்டுகள் பல மாண்டன! எனினும், காவிரிக்குப் பதிகம் பாட வாழ்த்துக் கூற, பாராட்ட இலக்கியம் இயற்றிட, செந்நாப் புலவரனைவரும் எடுத்திட்ட எழுத்தான்ிகளையும், ஒலை களையும்கூட, யாம் புரிவோம்:

காவிரியிலே மலர் மிதந்து வாராமலிருப்பின், கோவலன் காவிரியை வாழ்த்திப் பாடியிருக்க மாட்டான்:

அவன் டாடாமலிருந்தால், மாதவி மனத்தில் அழுக்காறு அரும்பி இருக்காது!

அழுக்காறு அண்டாமலிருப்பின், கோவலனை அந்த நாட்டியப் பேரரசி மதித்திருப்பாள் - இல்லையா?

ஆனால், நடந்து என்ன? காவிரியில் மலர் வந்தது! வாழ்த்தினான் கோவலன்:

t; §

"கனியிருப்பக் காய் கவர்ந்தாள்' மாதவி! இணக்கம் கணக்குத் தவறியதால் பிணக்காய் முடிந்தது!

இத்தகைய எண்ணற்ற இலக்கியங்களை உருவாக்கிய காவிரியைத் தான்ே கழறுகிறாய்?

அணை உடைத்த வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஆடி ஒடி வரும் காவிரியின் புதுப் புனல் போல், எம்.ஜி.ஆரின் பாச வெள்ளம் நாட்டிலே பெருகி, மக்கள் உள்ளங்களிலே அன்பெனும் வளத்தை உருவாக்கி, மாசெனும் மேட்டைச் சமன்படுத்தி, வறுமையெனும் பள்ளங்களைத் துர்த்து, புகழெனும் அறுவடையைப் பெற்ற விவசாயி அவர்