11
கலைமணியால் வடித்துவைத்த இந்நன் நூலை
காலத்தாய் மணிமுடியில் ஏந்து கின்றாள்! கலைஞர்களில் மணியென்றால் எம்.ஜி.ஆரே!
கனிந்தபுத்தர், ஏசு, லிங்கன் காந்தி யென்னும் தலைசிறந்த மனிதர்களில் ஒருவ ரெங்கள்
தலைமுறைத் தலையெடுக்கச் செய்த அண்ணா தலைமைக்குத் தலைவணங்கி வாகை சூடித்
தாரணியில் புகழெடுத்த பொன்ம னத்தார் நிலவுபுகழ் நிலமீதில் நிலைக்கச் செய்யும்
நேர்த்திமிகு நன்னுலே இந்நூ லாகும்!
‘போர்வாளில் 'திராவிட'னில் கருத்து வண்ணப்
பொன்வேய்ந்தார்; "மாலைமணி', 'முரசொ லிக்கும் சீரெழுத்துச் செம்மல்களில் ஒருவ ராகி
செம்மாந்த அண்ணாவின் கொள்கை தன்னை பாரறியச் செய்துவந்தார்; சுட்டெ ரிக்கும்
எரியீட்டி', 'பகையடிக்கோர் 'சவுக்க டி'யாய் வறுடைய எழுத்துக்கள் படைத்த வர்தான்்
வியன்நடையை விரிக்கின்றார்! இந்த நூலில்!
ஏழைகளின் நெஞ்சத்தில் கொலுவி ருக்கும்
ஏந்தலெங்கள் எம்.ஜி.ஆர். மகிமை யிங்கே வாழுகின்ற மன்பதையின் இதயத் துள்ளும்
வாழ வைக்கும் வரலாற்றுப் புனித நூலை ஏழிசைப்பண் தமிழெடுத்துப் புலமை வல்ல
ஏந்தலென்றென் என்.வி.கலை மணியார் தந்தார்! வாழிஇவர் தண்டமிழின் தண்மை போலே
வரலாற்றில் வாழியென வாழ்த்து கின்றேன்
- கவிஞர் மணிமொழி
கவிதைச் சித்தர் மணிமொழி 17/9, பீட்டர் சாலை அரசு அலுவலர் குடியிருப்பு, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.