苓器 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். இனப் பண்பாட்டு மரபுப்படி எண்ணக் கோயிலாக ஏற்று எழுதுகிறேன்.
நான் ஒர் ஏழை! அதனால், வரலாற்று மரபு வழிப்படி அந்தந்தக் கால கட்டிடமாக இந்த எழுத்தாலயத்தை எழுப்ப முடி யாமற் போனாலும், எழுப்புகின்ற இந்தப் புரட்சித் தலைவரது காவியத்தை, நான்கு பகுதிகளாகப் பிரித்துக் காட்டியுள்ளேன்!
எண்ணங்களை அலைமோத விடுகின்ற நானே, வாச கர்கள் சார்பாக, வாக்குவாதம் நடத்தும் வகையில், "எண்ணக் கோயில்’ என்ற இந்தப் பகுதிக்கு அடுத்து, கொடியேற்றம் என்ற பகுதியை அமைத்துள்ளேன்!
'அரசியல் அல்லல்படும் காலம் அல்லவா இன்று அறிவு விரும்பி ஒருவன், எம்.ஜி.ஆர். கால அரசியலைக் கடந்த கால நோக்கோடு பார்த்து, அவனிக்குரிய காட்சிகளாக்கி, அரசியல் அரங்கம் என்று பெயர் சூட்டி இருக்கின்றேன்!
கலையரங்கம் என்ற கட்டிடப் பகுதியிலே, கவர்ச்சி இருக்கின்றதோ, இல்லையோ எனக்குத் தெரியாது! ஆனால், முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன்!
பொது மக்கள் அரங்கம் என்ற கோபுரத்திற்குப் பொன் வேய்ந்திட எனக்குச் சக்தியில்லை! அதை ஏற்கெனவே, சோழர்களும், பாண்டியர்களும் செய்து முடித்து விட்டனர் - தமிழகத் திருக்கோயில்களுக்கு:
இந்த என் எண்ணக் கோபுரத்திற்கு கருத்துப் பொன் களைக் கலசங்களாக்கி வரிசைக் கட்டியிருக்கின்றேன்!
புரட்சித் தலைவரின் சிற்ப எண்ணங்கள், கொடை ஒவியங்கள், மனித நேய அழகுகள், அருமைகள், பண்புகள் தமிழனாகப் பிறந்தவர்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்! காரணம், அவர் மலையாளி அல்லர்; செந்தமிழ் வேளிர் மரபாளர்:
சந்தனப் பெட்டிகளிலே அடக்கமாகி விட்ட நமது சான்றோர்கள் தொண்டுகளின் மேல், ஒவ்வொரு மனிதனுக்கும்