பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 37

பய பக்தியான பாசமோ, அன்போ உருவாகிட வழியமைப்பது - சாகப் போகும் சந்ததியான நம்முடைய கடமை அல்லவா?

இறுதியாக, ஒன்று! மறுபடியம், நினைவுப்படுத்து கின்றேன்; இந்த எண்ணக் கோயிலினுள்ளே மனத் தூய்மையோடு வாருங்கள்!

எதையாவது எண்ணி, ஏற்கெனவே மனதிலே சுமந்துள்ள, ஏதோ, ஒரு காழ்ப்புச் சுமையோடு, அவர் நடிகர் தான்ே என்ற அலட்சியப் போக்கோடு, இந்த நூலையும், எடை போட்டால் ஏமாந்து போவிர்கள்!

மனிதம் மணக்கும் மனிதாலயம் இது! அவ்வளவுதான்் கூறலாம்! வாருங்கள் கொடியேற்ற விழாவினைத் துவக்கி வைப்போம்!

அறிவுலக மேதை சாக்ரடீஸ் அவர்கள், தனது மாணவர் களுடன் வாதப் பிரதிவாதங்களாடிய உரையாடல்களைப் போல காண்போமா....

r པོ།༽ அவரே ஒரு கவிதை

நமது எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும்போது, அழகும், உள்ள உணர்ச்சியும்தான்் கவிதை என்று சொன்னார். இதைச் சொல்லும்போது நீங்கள் எல்லாம் கை தட்டி மகிழ்ந்தீர்கள். எதற்காகக் கைதட்டுகிறீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். அப்போது தான்் அவர் தன்னைப் பற்றிப் பேசினார் என்று புரிந்தது. அது அவருக்குத் தான்் பொருந்தும்.

- இரண்டாம் உலகத் தமிழ்நாடு 1968ல் சென்னையில் நடந்தபோது அண்ணாவின் புன்னகை உரை