உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழஞ்சலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி காலத்தின் கட்டளை இது! இதைக் கூற நீ யார்? என்று, என்னைக் கேட்டால்: அவர்கட்கு இதே ஒர் உவமை. கண்ணுக்கு முன்னால் காட்சியிருக்கிறது. கண்ணுக்கும் காட்சிக்கும் இடையே இருப்பது தூரம் மட்டுமல்ல - காற்றும் இருக்கிறது. காற்றின் அனுமதியின்றிக் கண்ணொளி காட்சியைத் தீண்ட முடியாது. எனவே, காலத்தின் கட்டளைப்படி, அறிவை நோக்கி ஒடுபவன் அண்ணாவிடம் இளைப்பாறவே வேண்டும். உருண்டு இரைச்சலிடும் அலையொத்த கடல் போன்றது - காலம்! அதனுடைய இரைச்சலில் அர்த்தமற்ற மொழிகளின் சஞ்சாரம்: கோடைக் காலத்தில் வைக்கப்பட்ட விருந்தைப் போல; விரைவில் ஜீரணமாகி விடுகிறது. உண்மையிலேயே நொந்து - வறுமையின் வெவெடப்பால் கொடுமையின் குளிரால் - இறுகி; வெளியே வரும் வார்த்தைகள் - காலத்தின் தொண்டை வழியச் சென்றாலும் ஜீரணமாக முடியவில்லை. நொந்து போனவனுடைய சப்தம் - இரக்கமுடையவனுடைய இரைச்சல் - கருணை கொண்டவனுடைய விம்மல் - கதியற்றவனுடைய கூச்சல் - i i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/21&oldid=863561" இலிருந்து மீள்விக்கப்பட்டது