பக்கம்:தமிழஞ்சலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அழுகையின் தீனமான குரல், காலத்தால் ஜீரணிக்கப் படுவதில்லை. அண்ணாவினுடைய குரல்: மனித சமுதாயத்திற்காகக் கதறி அழுத குரல் காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை. காலத்திற்கே அது, கதை கூறும் ...ទ្វារ៉ាវាំ நரகத்தோடு தொடர்பு கொண்டவன் - கோவிலில் படிக்கட்டாக மிதிபடுகிறான். மோட்சத்துக்கு முந்தானை போட்டவள் - என்றைக்கும் வாலிபக் கன்னியாகவே இருக்கிறாள். அவளைக் கிழவியாக்கும் சக்தி, காலத்திற்கு இல்லை. அண்ணா மோட்சத்திற்கு முந்தானை போட்ட கன்னி! அவருடைய வாலிபத்தைக் காலம் காதலிக்கிறது. கடவுளிடத்தில் தண்டனை பெற்றவன் - உண்மையான மனிதனாக மாறுகிறான். அரசாங்கத்திடம் தண்டனை பெற்றவன் - மீண்டும் கைதியாகவே வெளியே வருகிறான். அரசாங்கக் கைதியைப் பார்த்து; ஆண்டவன் கைதி - பூரணத்தை நோக்கி ஓடிவா என்றழைக்கிறான். அரசாங்கக் கைதி இறுதியில் கல்லறைக் கைதியாகவே மாறுகிறான். ஆண்டவன் கைதி அவனுக்காகக் கண்ணி விடுகிறான். 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/22&oldid=863573" இலிருந்து மீள்விக்கப்பட்டது