பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


அழைத்ததால், அவரும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தார்!

பங்கிம் சந்திரர் பாராட்டு

இந்தச் சம்பவத்தைக் குறித்து பிற மொழியாளர்கள் சிந்திக்கும் போது ஒன்று புரிகின்றது. அதாவது, வங்க மொழியைத் தாய் மொழியாகப் பெற்றவர்கள். அந்த மொழிக்குத் தொண்டு செய்வோரை, அவர்கள் தங்களுக்கு முன்பின் நேரிடையான அறிமுகமோ, அல்லது தொடர்போ இல்லாமலிருந்தாலும் கூட, அந்த வங்கமொழி வித்தகா்களை அவரவர் வீட்டிலே நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து பலரறியப் பாராட்டி அறிமுகப்படுத்துவதையும்-மொழித் தொண்டாகக் கருதி இருந்தார்கள்.

அந்தத் திருமணத்திற்கு பங்கிம் சந்திரரும், கவிஞர் தாகூரும் வந்திருந்தார்கள்! அப்போது திருமணம் நடத்துவோர். தாகூரையும், சட்டர்ஜியையும் பெருமைப்படுத்துவதற்காக மலர்மாலைகைளை எடுத்துக் கொண்டு வந்து, முதன் முதலாக சட்டரிஜி கழுத்தில் அணிய முற்பட்டபோது, பங்கிம் சந்திரர் அதைத் தடுத்தார்!

அந்த மாலையைத் தனது கைகளிலே வாங்கிக் கொண்டு, இரண்டு மூன்று இருக்கைக்கு அப்பால் அமர்ந்திருந்த ரவீந்திரரிடம் சென்று, அவர் கழுத்திலே சூட்டி சட்டர்ஜியே முதலில் கையொலியை எழுப்பினார்.

அனைவரது முன்பும் தாகூரது கலைத் தொண்டைப் பாராட்டி அங்குள்ள அனைவருக்கும் மூத்த எழுத்தாளரான