புலவர் என்.வி.கலைமணி
⃞ 109
எடுத்த ஆராய்ச்சியிலோ தோல்வி மேல் தோல்வி. முயற்சிகள் எல்லாம் தோல்வி. சோதனைக் கருவிகள் எல்லாம் உண்டந்து போயின. இந் நிலையில் சூறாவளி! நாசம்!- அதிலும் கிருமிகள் மோசம் செய்த காட்சி.
டாக்டர் பால் எர்லிக், இந்த இக்கட்டான சூழ் நிலையில் தனது அறுநூற்று ஆறாம் சோதனையிலே ஈடுபட்டார்.
இந்த பரிசோதனையை மிகப் பொறுப்போடும், பொறுமையோடும் செய்தார். முன்னிலும் மிகப் பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கும் கருவிகளை நம்பிச் சோதனை செய்தார்.
பெற்ற தாய் தனது குழந்தையின் அருமை அறிந்து பாலூட்டி மகிழ்வதைப் போல தன்னை மறந்த எர்லிக், சூறாவளிக்குத் தப்பிய பூச்சிகளுக்கும் பொறுமையோடும் - பொறுப்போடும் சாயத்தை ஊட்டினார்.
கி.பி. 1901 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று பைத்தியக்காரனைப்போல் சத்தமிட்டுக் கொண்டே வீதி வழியே ஒடினார்.
எதிரே யார் வந்தாலும் முட்டிமோதிக்கொண்டே வீதி வீதியாக ஓடினார். ஒடிக் கொண்டே இருந்தார். திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, ஏதோ உளறியபடியே ஒடினார்.
பூச்சிப் பைத்தியம் ஒடுகிறது. பூச்சிப் பைத்தியம் ஒடுகிறது என்று வீதியே சென்றவர்கள் ஏளனக்குரல் கொடுத்தார்கள். கிருமிக் கிறுக்கனுக்கு கிறுக்கு