பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


முற்றித் தலைக்கு ஏறிவிட்டது என்று வேடிக்கைப் பார்த்தவர்கள் பேசியபடியே சென்றனர்.

ஓடிக் கொண்டே இருக்கும் டாக்டரைப் பார்த்த சில சிறுவர்கள், “பைத்தியம், பைத்தியம்” என்று கற்களால் வீசினார்கள். பின்னாலேயே கூச்சலிட்டுக் கொண்டு துரத்தியபடியே ஓடினார்கள்.

யார் பேச்சையும் சட்டை செய்யாமல் டாக்டர் ஓடினார். சந்து சந்தாக ஓடினார். இறுதியாக ஓர் ஏரியின் மதகின் ஒரத்தில் போய் ஒய்ந்து நின்றார்.

அங்கு இருக்கும் கிருமிகளை எல்லாம் தேடிப் பிடித்தார். எங்கெங்குப் பூச்சிகள் இருக்கின்றன என்று தேடித் தேடிப் பார்த்தார்.

அங்குக் கிடைத்த எல்லாப் பூச்சிகளையும் சேகரித்து ஒரு பெட்டியிலே போட்டுக் கொண்டு மீண்டும் ஊருக்குள் ஓடி வந்தார்.

எர்லிக் ஏன் இப்படி ஓடினார்? சூறாவளிக்குத் தப்பிப் பிழைத்த அந்தப் பெட்டிக்குள்ளே இருந்த பூச்சிகளை, அவர் அந்த ஏரியின் மதகருகேதான் பிடித்தார். மறுபடியும் அதே கிருமிகள் தேவை என்பதற்காகவே மீண்டும் அவர் அப்படி ஓடினார்!

அவர் ஒடிய நாள் உலக மக்களுக்குப் பொன்நாள்! நன்நாள்! விடி வெள்ளி நாள்! மானிட சமுதாயம் மறக்க முடியாத மாண்புமிகு நாள்! ஏன் தெரியுமா?

சூறாவளிக்கு பிறகு சாயம் ஏற்றி விட்டு, மீண்டும் வந்து அவர் பார்த்தபோது அவ்வளவு கிருமிகளும் செத்துக் கிடந்தன!