உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

லியோ டால்ஸ்டாயின்

விளக்கி எழுத என்று எழுதுகோல் எடுத்தாரோ அன்றே பழக்க வழக்கங்களைத் தனது புலனடக்கங்களால் கொன்று அழித்து, நல்ல சமுதாய வளர்ச்சிக்கான பழக்க வழக்கங்களை வளர்த்து அதன்படி வாழ்ந்து காட்டினார் டால்ஸ்டாய்!

இரஷிய நாட்டிலே புலால் உண்பதே பிறவிப்பயன்! அவர்கள் இடையே மாமிசம் உண்பதை அறவே கைவிட்டு, ‘இறைச்சி உண்ணாதே’ என்றுதான் கூறியதற்கு எடுத்துக்காட்டு இலக்கணமாகத் திகழ்ந்தவர் லியோ!

தமிழ்மக்களிலே வாழும் சில வீர சைவர்களைப் போல கம்பீரமாக சைவ உணவுகளைப் பற்றித் தனது கட்டுரைகளிலே எழுதியவர் அவர். ருஷ்ய நாட்டிலேயும் சில வீரசைவக் குடும்பங்களைத் தோற்றுவித்து உடலோம்பலின் வழிகாட்டியாக நின்றவர் டால்ஸ்டாய்!

பொழுதுபோக்குக் குடிபோதைக் களியாட்ட மன்றங்களிலே ஆடிப்பாடி ஆடம்பரமாக வாழ்ந்து பெரும் போதையெனும் பள்ளத்தாக்குக்குள்ளே வீழ்ந்து கிடந்த அவர், என்று அது சமுதாயத் தீமைகளிலே ஒன்று என்று நிலை நாட்டி எழுதினாரோ, அன்று முதல் அவற்றின் போக முகங்களை ஏறெடுத்தும் பாராமல், மிக மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டு சமுதாய மேன்மைக்குச் சான்றாக விளங்கினார்.

இந்திய நாட்டிற்கு அரும்பாடு பட்டு சுதந்திரம் பெற்றுத்தந்த அண்ணல் பெருமான் காந்தியடிகளை, பாரதப் பெருமக்கள் தேசப்பிதா என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும், பேருணர்ச்சி யோடும் எப்படி அழைக்கின்றோமோ, அந்த மனிதப் பண்பாட்டு ஒழுக்க உணர்வோடு, காந்தியடிகள் லியோ டால்ஸ்டாயை “எனது குருநாதர்” என்று வணக்கம் செலுத்தி ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது.