பக்கம்:இசைத்தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j4? வகையாகப் பகுத்துரைத்த தொல்காப்பியர், நாற்சீர்களால் இயன்ற நேரடியொன்றினையே அதன்கண் அமைந்த எழுத் தளவு பற்றி நாலெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந் தன குறளடி எனவும், ஏழுமுதல் ஒன்பதெழுத்து வரையும் உள்ளன சிந்தடி எனவும், பத்து முதல் பதினுன்கெழுத் தளவும் அமைந்தன நேரடி எனவும், பதினைந்து முதல் பதினேழெழுத்துவரை யமைந்தன. நெடிலடி எனவும், பதினெட்டுமுதல் இருபதெழுத்தளவும் அமைந்தன கழிநெடி லடி எனவும் ஐவகைக் கட்டளையடிகளாகப் பகுத்துக் கூறி யுள்ளார். எழுத்தளவுபற்றி அடிவகுக்கும் இம்முறை, முற்காலத்தில் இசைத்தமிழ்ப் பாடல்களுக்கும் வகுத்துரைக் கப் பெற்று நால்வகைப் பெரும் பண்களாகிய சாதிப் பாடல் உவமத்துரு திருவிரியிசை என்னும் இசைப்பாடல் கள் எழுத்தெண்ணி வகுக்கப் பெற்றன எனவும், கட்டளைப் பாடல்களாகிய அவை பிற்காலத்தில் வழக்கொழிந்தன. எனவும், அவை வழக்கொழிந்தமை பற்றி அவற்றை ஏனைப் பாடல்களோடு ஒப்பிட்டுக் குறைவாக ஒதுக்கி விடுதல் கூடாது எனவும் பேராசிரியர் அறிவுறுத்துகின்ருர், 'இந்நூல் செய்த காலத்துத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்று வரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுதுமென்பது. இதன் முதனுல் செய்த ஆசிரியருற் செய்யப்பட்ட யாழ்நூலுள்ளுஞ் சாதியும் உவமத்துருவும் திருவிரிசையுமெனக் கூறப்பட்ட வற்றுட் கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப் பாட்டுக்களே; அவை இக்காலத்துப் பயின்றிலவென்று மற்றைய வற்ருேடு ஒக்குமெனப்படா வென்பது (தொல். செய்யுள் 51) எனவரும் பேராசிரியருரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/157&oldid=745008" இலிருந்து மீள்விக்கப்பட்டது