பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

தனையோ பிரிகவுளை இயக்கங்களாக, உருவாக்கி வைத்து வளர்த்துச் சிலுவையிலே மறைந்தவர் அல்லர் அவர்!

இயேசு பெருமான் நடமாடிய காலத்து மக்களது வாழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, அவர் பல வியூகங்களிலே கருத்துக்களை ஞான போதனைகளாக ஏற்று, உலகு எங்கும் பற்பல கிளைகளை உருவாக்கி, ஓர் அரசாங்கம் போல நடந்து வரும் கிறித்துவத்தின் ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவு பாதிரியார்கள் இருக்கிறார்களே அவர்கள் அந்தக் கிறித்துவ மதத்தின் தலைவர்கள் ஆவர்!

இயேசு பெருமான் கூறியவை எல்லாம் உலகும், மக்களும் மனநிறைவு வளமோடு வாழ்ந்திடக் காட்டிய வழிகாட்டுதல் தத்துவங்களே ஆகும்? அதனால், அவர் கிறித்துவ மதத்தின், அது எந்தப் பிரிவு கிறித்துவ இயக்கமானாலும் சரி, அவற்றுக்கு எல்லாம் மூலவர், வழிகாட்டியவர் இயேசு பெருமான்தான். அதனால், அவரைக் கிறித்துவ மத வழிகாட்டி என்று கூறலாம்!

அந்த வழிகாட்டியின் இறை வழிபாட்டுக்குரிய நிர்வாகப் பணிகளைச் செம்மையாகச் செய்து வருபவர்தான், மதப் பிரிவு இயக்கத்தின் தலைவராக மதிக்கப்படுவார்! அந்தத் தலைவருக்குக் கீழே பணியாற்றும் தகுதி-தரதிற்கேற்றவாறு, மாவட்டம், வட்டம், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சித் தலைவர்களைப் போல கிறித்துவத் தகுதிப் பதவிகளோடு பணியாற்றி வருவார்கள்!

வழிகாட்டி என்பதற்கும், தலைவர் என்பதற்கும் இடையே உள்ள உட்பொருள் அடிப்படை இவையே! எனவே, நாம் மேற்கூறியவர்கள் அனைவருமே உலக வழிகாட்டிகளே ஆவர்! அவர்களுக்குப் பின்னே, அவரவர் தத்துவங்களைப் பின்பற்றி மக்களுக்குத் தொண்டாற்றிப் பணிபுரிபவர்கள் அனைவருமே தலைவர்கள்தான்!