உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

17

அண்ணன் தம்பி சச்சரவு பிரச்னை மனவேதனையைக் கொடுத்துவிட்டது.

போஸ்டன் நகரைவிட்டு யாருக்கும் தெரியாமல் கப்பல் ஏறிய பெஞ்சமின், நியூயார்க் நகரம் வந்து, அங்குள்ள தனது நண்பர் மூலமாக, பல கடுமையான இடையூறுகளை யெல்லாம் கப்பலில் ஏற்று, கப்பல் பயணப் போராட்டங்களை எல்லாம் பொறுமையாகச் சமாளித்துக்கொண்டு விரக்தியான நெஞ்சோடு பிலடெல்பியா நகரை வந்தடைந்தார். பாவம் பசிப்பிணி வாட்டி எடுத்தது. கையிலே ஒரு காசும் இல்லை. என் செய்வார்.

படகைவிட்டு, தள்ளாடித்தள்ளாடி பசி மயக்கத்தோடு நடந்து வந்த பெஞ்சமினைப் பார்த்து, டிபோரார்ட் என்ற ஒரு சீமாட்டிப் பெண் பரிதாபமாகச் சிரித்தபோது, அந்த வழியே ரொட்டி விற்றுக் கொண்டு வந்த ஒருவன் ஃபிராங்ளின் பசியைத் தீர்க்க ரொட்டி ஒன்றைக் கொடுத்தான். அந்தப்பெண் அந்தக் காட்சியைக்கண்டு நையாண்டி செய்தபடியே சென்றார்.

அந்த பெண் சீமாட்டிதான், பிற்காலத்தில் தனக்கு மனைவியாக வரப்போகிறவள் என்பது பெஞ்சமினுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பெண்ணின் சிரிப்பையும் கிண்டலையும் கண்டதும் பெஞ்சமினுக்கு ஒருவித வெட்கம் ஏற்பட்டது.

பசி களைப்பு தீர்ந்த பெஞ்சமின் பிலடெல்பியா நகரை சுற்றி வேலை தேடினார். எந்தெந்த வேலை கிடைத்ததோ அதையெல்லாம் தனது சூழ்நிலைக்கு ஏற்றபடி செய்து பணம் பெற்றார். பசி ஏக்கத்தோடு திரிந்த அவருக்கு இப்போது நாலு காசும் கையிலே சேரும் அளவுக்கு அங்கங்கே கிடைத்த வேலைகளை எல்லாம் சளைக்காமல்

ந. மே-2