புலவர் என்.வி. கலைமணி 2*
சமணர், அதை மகா வீரரின் மும் மணிகள் என்பர்!
ஆனால், நான் அதை மனிதாபிமான மிகுந்த ஒரு நடிகரின் வாழ்க்கையிலே எதிரொலித்த, புகழ்ச் சிகரத்தின் உயரம் என்பேன்!
'மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.' என்ற இந்த எனது சிந்தனை ஓவிய மாளிகைக்குள் நுழையும் ஒவ்வொருவரும், மன சுத்தமாக வர வேண்டும்!
ஏனென்றால், இது ஒரு மனிதாபிமானியின் அடையாளம்:
ஏழை மக்களைப் பூஜித்தவரின் கோயில்! ஆம்! ஏழ்மையைப் போற்றியவருக்காக உருவாக்கப்பட்ட ஞானக் கோயில்!
மதிய உணவுக்காக அலைந்து கொண்டிருந்த இலட்சக் கணக்கான மனிதப் பிஞ்சுகளின் மானிடக் கோயிலல்ல!....... 'கோ'வில்!
அரசியலில், தான்் ஏற்றுக்கொண்ட ஒரு தமிழ்ப் பண் பாட்டுத் தலைவரின் நன்றியை மறவாத நாடாண்ட நாயகன்; அடக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு ஆலயம்:
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை; செய்ந்நன்றி கொன்ற மகற்கு'
- என்ற வாழ்க்கைச் சாசனத்தை நமக்கு வரையறுத்த வள்ளுவர் கோட்டத்தின் வாரிசு அது!
இத்தாலிய நகரத்தின் கி.பி. பதினாராம் நூர்றாண்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைச் சிந்தனையாளர் லொரான் சோகிபர்டி (Lorenzo Ghibert) என்பவர்; ஃபிளாரன்ஸ் நகர இயேசு தேவலாயத்தின் கதவுகளிலே செதுக்கிய, சிற்ப வேலைப்பாடு களைக் கண்ட ஒவியக் கலை மேதை மைக்கேல் ஆஞ்சலோ, 'இந்தக் கதவுகள் சொர்க்கத்தின் வாயிலிலே வைப்பதற்குத் தகுதி பெற்றவை என்று, வியந்து போற்றிய அற்புதக் கதவுகளால் ஆனவை அல்ல!