ఢీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். மக்களிடையே பேசி அறிவு மணம் பரப்பினார் என்று வேண்டுமானால் கூறு...!
இதைச் சொல்லாமல், எங்களுக்குத் தெரிந்த உவமையினையே இயம்புவதால், நீர் ஓர் எழுத்தாளானா? என்று வாசகர்கள் என்னை வினவக்கூடும். அல்லவா?
'அப்படியா.....! புரட்சித் தலைவரை நிலவு என்று ஏன் சொல்லக் கூடாது? என்று உங்களைப் பார்த்து நான் கேட்கலாம் இல்லையா?”
'ஏலே...! அல்லியின் அந்தரங்கக் காதலன் அம்புலி! கொல்லிமலைச் சாரலிலே, குளிர் புனலாய் ஊற்றெடுக்கும் அருவியின் தோன் வருடும் வெள்ளிநிலா!'
பாசியின் மகளிர், பறம்பு மலையைத் தன் தந்தையின் பகைவரது தாக்குதலால் கை சோரவிட்டு, தான்ும் களத்திலே
வேலியற்ற இளம் மொட்டுகளாய் வெந்தழல் மூட்டியிருக்கும் நெஞ்சினராய், துணையற்ற மங்கையராய், துவண்டு அடவிகடந்து, ஆறு கடந்து, அல்லல் பல கடந்து வந்தனர்!
செந்தமிழ் பெண்பாற் புலவர், தமிழகக் கிழவி ஒளவை மூதாட்டி, அப்போது அவ்விரு நங்கையரைச் சந்தித்து, "பிறிதோர் வெள்ளுலச போழ்தில்', 'யார் நீவிர்' என்று வினவினார்.
தமிழ்ச் செறிவு கொண்ட அவ்விரு அணங்குகளும்’
ஒளவையே, கொவ்வைத் தமிழ்க் கணிச் சாறே, நாங்கள் டாரியின் தொட்டில் நிறைந்த கண்மணிகள், அம்மட்டோ...!
& 4
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்.....!’ என்ற பாடலையே அவ்வணங்குகள் பாட ஆரம்பித்தனர்!
தமிழ்க் காட்சிகள் சுரக்கும் ஒளவையின் கண்களில், பாரியைப் பற்றிய அவல நீர் சுரக்க ஆரம்பித்தது!