இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்.வி. கலைமணி கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு - காக்கையின் கூடு வாழ்விடத்தைத் தருகிறது. நாடு ஆக்கத் தெரியாத தமிழனுக்கு - அண்ணாவின் நாக்கு தென்னம் நரம்புகளைத் தேடித் தேடித் தந்தது. அண்ணா இதயம், வானம் விரிவதற்கு முன்பே விரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், கொதிக்கும் கனலியையும், குளிரும் புனலியையும், உதிரும் விண்மீனையும், ஒழுகும் மேகத்தையும், சிறும் மின்னலையும், கீறும் இடியையும் தாங்கி, "எதையும் தாங்கும் இதயத்தை" அவர் பெற்றிருந்தது அதனால்தானே! ஏன் இதைக் குறிப்பிடுகிறேன், தெரியுமா? பழம் விழுந்தவுடன் பிஞ்சு பூரிப்பதுபோல, சிலர் அண்ணா வீழ்ந்தவுடன் பூரிக்க ஆரம்பித்தார்கள். பாவம் அவர்கள்! எந்தக் காம்பிலே இருந்து அண்ணா விழுந்தாரோ, அந்தக் காம்பிலே இருந்து அவர்களால் முளைக்க முடியவில்லை!