என்றொரு தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது இந்த முதல் தொகுப்பே, பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அழுத்தம் உடையதாக இருந்தது. இதனால் இந்தத் தொகுப்பிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. கலை இலக்கியம், அரசியல் எனப் பல தளங்களில் கால் பதித்தவர் மீரா. கல்லூரி நாட்களில் கழகக் கவிஞர் என்றே இவரைப் பலர் அறிந்து வைத்திருந்தார்கள். அன்றைய இளம் நண்பர்களை ஒன்று திரட்டி 'இளைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவியவர். இலக்கியம், இலக்கிய வட்டம், இலக்கியம் சார்ந்த பேச்சு, நிகழ்ச்சிகள் என்றே தம் எண்ணங்களை உலாவ விட்டவர் மீரா. தன் நெருங்கிய வகுப்புத் தோழரான அடதுல் ரகுமானுடனும் ஒளவை நடராசன் போன்றோருடன் இணைந்து தொடங்கியதுதான் மதுரையில் தியாகராசர் கல்லூரி இலக்கிய அணி. அதுதான் பின்னர் கா.காளிமுத்து, நா.காமராசன், மு.மேத்தா என்று பலரை ஐக்கியப் படுத்தியது. அப்போதே மீராவின் கவிதைகள் தென்றல், இனமுழக்கம், திராவிடம், 'மன்றம் போன்ற இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. 1964-ல் வெளிவந்த இராசேந்திரன் கவிதைகள் தான் மீராவின் படைப்பைத் தாங்கி வெளிவந்த முதல் முழு கவிதை நூல். மரபுக்கவிதையால் தீட்டப்பட்ட இந்த நூலின் ஒவ்வொரு அடியிலும், சீரிலும், அசையிலும் கவிதை இருந்ததைப் பலர் வியந்து பாராட்டி உள்ளனர். 1965-ல் மீராவின் மூன்றும் ஆறும் என்னும் மேடைக் கவிதைகள் நூலாக வெளிவந்தன. முடியரசன், கண்ணதாசன், ராய.சொ. முதலான பல கவியரசர்களின் 20i
பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/202
Appearance