8 இல்வாழ்க்கையில் ஏற்படும் துன்ப இடிகளும் இன்பப் பிடிகளும் பேரின்பப் பெருவாழ்விற்குப் படிகள். 兹 冷 $ தனிமனிதன் தழைப்பது வீட்டால், வீடு தழைப்பது நாட்டால், தனிமனிதன் அமைதி குலைவது வீட்டாலும் நாட்டாலும், வீட்டின் - நாட்டின் அமைதி குலைவதும் ஒரோவழி தனிமனிதனல் எனவே தனிமனிதன்-வீடு-நாடு மூன்றும் முத்தமிழ்போல் ஒருங்கினேந்து செயற்பட்டாலே உயர்வு. தன்னலமே எல்லா அலைவு அல்லல்கட்கும் அடிப்படைக் காரணம். இந்நலம் குறையின் இன்னலம் ஏற்படும். தன்னலத் தகர்விற்கு-பொதுநலப் பூப்பிற்கு-ஒரே வழி பொதுஉடைமை. பொதுவுடைமை பூக்க ஒரே வழி தீவிரக் கருத்துப் பரப்பே. இலட்சிய வெறி-குறிக்கோள்; நெறி-கொண்ட இளை ஞர்கள் மாணவ மணிகள்-என்றைக்குப் படையெனத் திரண்டு இது குறித்துச் சூள் கொள்கின்றனரோ அன்றே புதிய பாரதம் சூல் கொள்ளும். பழைய பாரதப்போர் ஒரு குடும்பத்திற்காக நடந்தது; புதிய பாரதப்போர் ஒரு கொள்கைக்காக-ஒற்றைப் பொதுவுடைமைக் குடும்பத்திற்காக நடைபெற வேண்டும் 酸 சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/10
Appearance