6{} பயன்படுத்திக்கொண்டு பார்ப்பனப் புரோகிதர்கள் சேரிகளுள்ளும் செல்வாக்குச் செலுத்துகின்றன ராம். சம்பிரதாயத்தில் வசதி படைத்தோர் செய்யும் முறைகளை அப்படியே பின்பற்றும் ஏழை மக்க ளின் இயல்பையே இது காட்டுகிறது. (8) இனி தமிழ்நாட்டுச் சாதிகள் பலவற்றுள் வழமையாக இருந்து வக்த திருமண முறைகளை ஒப்பிட்டு ஆய்வது பெரிதும் விரும்பத்தக்கது. எனினும் எனக்கு அதற்கு நேரம் இன்மை குறித்து வருந்துகிறேன். ஆயினும் கொங்கு வேளாளர் திருமணத்தில் நாவிதன் கூறும் திருமண வாழ்த்து என்னைப் பெரிதும் கவர்ந்தது. (9) தமிழர் திருமண முறைகளுள் சிறப்பு வாய்ந்த ஒன்று கோயில் திருமணங்கள். பெரிதும் காட்டுப் புற மக்கள் அல்லது ஏழை மக்கள் இன்றும் கோயில்களில் இத்தகைய எளிய முறைத் திரு மனம் மேற்கொள்கின்றனர். செல்வர்கள் வேண் டுதல் காரணமாகவும் கோயில் திருமணங்கள் புரிவதுண்டு ஆரவாரத்துடன். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெறும் இறைவன் திருமணத்தின்போது பெற்ருேர் அறிக் தும் அறியாமலும் நடைபெறும் ஏராளமான தொகைத் திருமணங்கள் (Mass Marriages) குறிக்கத்தக்கன.
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/61
Appearance