உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சில ஆண்டுகட்கு முன்பு பெரும் ஆராய்ச்சிக்கு இடமான இத் தாலி தமிழர்க்கே உரியது; காரணம் தாலிகட்டும் வழக்கம் இன்றும் வடகாட்டில் இல்லை. இத் தாலி கட்டும் வழக்கம் ஒருத்தி திருமணமான வள் என்பதை வெளிப்படையாய்க் குறிக்கவும் பெண் ஆணுக்கு அடக்கம் என்று மறைமுகமாக வலியுறுத்தவுமே ஏற்பட்ட வழக்கம் எனலாம். பழந்தமிழ் மக்கள் தங்கள் வீரத்திற்கு விளக்க மாகப் போற்றத் தொடங்கிய புலிப்பல் தாலியே பிற்காலத்தில் திருமணத் தாலியாய் மாறிற்று என மதிக்கலாம். 'தாலி கட்டுதல் போலவே கைம்மைக்கு அறி குறியாகப் பெண்கள் மொட்டையடித்து முக்காடி டலும் தமிழ் வழக்கே போலும்'. (6) இனி, கி. பி. எட்டாம் நூற்ருண்டு தொட்டுத் தொடங்கி விரிவாகிவிட்ட வைதிகத் திருமணச் சடங்குகளின் பொருண்மை பற்றிய ஓர் குறிப் பைப் பார்த்துவிட்டு இக்காலத் திருமண முறை களைக் கருதலாம். இக்குறிப்பு கலைக் களஞ்சியத் தில் இருப்பது. ldsor& #LäGjóðir (Marriage-rites) "மணச் சடங்குகளில் தம்பதிகளுக்கு உண்டா கும் புதிய கிலேயையும் மாறுதல்களையும் பக்தல் அமைத்தல், ஊர்வலம் வருதல், மத்தளம் கொட்