பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது - 49

அவர் என்ன காரணத்தினால் சொல்லியிருப்பாரென்று சந்தேகிப் போருமாய் எல்லோரும் சிறிது நேரம் குழப்பமடைந்து ஒய்ந்திருந்தனர்.

உடனே நியாயாதிபதி, ‘சரி; இவரை நீர் பின்பு வேண்டு மானால் குறுக்கு விசாரணை செய்ய நான் அநுமதி கொடுக்கிறேன். அந்த அம்மாளை வருவித்து வாக்குமூலம் வாங்கும் விஷயம் போலீசாரைப் பொறுத்தது. அவர் விசாரணையை நடத்தத்தான் வேண்டுமென்றால், நான் அப்படியே செய்தாக வேண்டும்” என்று கூறி பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரை நோக்கினார்.

உடனே பிராசிக.டிங் இன்ஸ்பெக்டர் மிகுந்த ஆத்திரத் தோடு கனைத்துக்கொண்டெழுந்து, ‘கோர்ட்டார் அவர்களே! இந்த சாட்சி இந்தப் பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்கும், மரியாதையும், பெருமைப்பாடும் வாய்ந்தவர். இவர் பொய் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக இந்தக் கைதி சொல்வது வேண்டுமென்றே இவரை இத்தனை ஜனங்களுக்கு முன் அவமானப்படுத்துவதற்கேயன்றி வேறல்ல. இவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதில் விஷயம் ஒன்றுமே இல்லை. குழந்தையைக் கொண்டு வந்து காட்டி, நகைகளின் பெறுமானம், அவைகளைத் தாம் செய்த இடம் முதலியவைகளைத்தான் இவர் சொல்லி யிருக்கிறார். இவருடைய சம்சாரத்தை விசாரிக்க வேண்டா மென்று அவர்களிடம் நிரம்பவும் அபிமானமும், மரியாதையும் வைத்தவர் போலப் பேசியது வஞ்சகப் புகழ்ச்சியும் குறும்புத்தனமு மேயன்றி உண்மையான சொல்லல்ல. ஆகையால் கோர்ட்டா ரவர்கள் இதைக் கவனித்து, தீர்ப்பு எழுதும்போது, இந்த அவதூறுக்குத் தக்க பரிகாரம் இந்த சாட்சிக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்றார்.

உடனே நியாயாதிபதி, சரி; இன்ஸ்பெக்டர் ஆட் சேபிக்கிறார். அந்த அம்மாளைக் கூப்பிடுங்கள். விசாரிப்போம்” என்றார்.

உடனே சேவகன் மேலப்பண்ணை முதலியாருடைய சம்சாரத்தை அழைக்க, அந்த அம்மாள் மிகுந்த நாணத்தோடு தயங்கித் தயங்கி வந்து சாட்சிக் கூண்டின்மேல் ஏறி நின்று செ.கோ.:V-4