என்று யாரேனும் தன்னைப் புகழ்ந்தாலும் அதை இழிவாகக் கருதவும் அவனால்தான் முடியும். அவனை வசந்திசேனை விரும்ப வேண்டுமாம். காசைப் பறிப்பவள், உலர்ந்தமீனை உண்பவள், கூத்தாடி, இழிந்த ஆசைக்காரி, குலத்தைக் கெடுப்பவள், பிறர் வசப்படாதவள், மன்மதன் பெட்டி, சேரிக்குட்டி, வேசி, விலைமகள், பரத்தை இப்படிப் பத்துப்பெயர் வைத்தழைத்தும் வசந்தசேனை அவனைத் திரும்பிப் பார்க்கவில்லையாம்; விரும்பிப் பார்க்கவில்லையாம். ஒவ்வொரு பெயரும் மிக அழகான பெயர்தான்! இல்லையா அவன் வைக்கும் பெயர் பதினொன்று; ஆனால் பத்து என்கிறான். அவனுடைய கணக்குத்தான் சரியில்லை; வழியாவது சரியாயிருக்கக் கூடாதா? 'குணமன்றே காதற்குக் காரணம். வலிந்து பற்றல் காரணமன்று' என்று வசந்தசேனை கூறுவதைக் கேட்ட பிறகாவது காயைத் தானாய் கனிய வைப்போம் என்று விலகிச் செல்கிறானா? இல்லை. பழம் நழுவிப் பாலில் வீழ்வதைப்போல் பேசுகிறானா? இல்லை. நெருப்பில் வீழ்ந்த இறைச்சியைப் போல் என் நெஞ்சை வேகவைக் கிறான் மன்மதன் (1) என்கிறான். இந்த வார்த்தையைக் கேட்டு எவள்வாரியணைக்க வருவாள்? 'அம்மாதாயே!” என்று வசந்தசேனையைக் கூப்பிடுகிறான். இதைக் கேட்டுக் கன்னிப் பெண் எவளாவது ஓடிவருவளா? காததுரம் ஓடிவிடுவாள்! சாரமற்ற வார்த்தைகள் பேசும் சகாரன் பல சந்தர்ப்பங்களில் ஒரு பித்தனைப்போல் செயல்படுகிறான். அவன் புத்தியை மாறுபட வைத்திருப்பது போதாதென்று கத்தியையும் மாறுபடப் பிடிக்கும்போதும், 'ஐயனாகிய விடனது தலையை என் கால்களால் தொட்டுச் சத்தியம்
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/110
Appearance