பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH{} மண்ணியல் சிறுதேர் கூறுகின்றேன்' () என்று கூறும்போதும், இருட்டில் விடன், சேடன், இரதணிகை ஆகியோரை வசந்தசேனை என்று நினைத்துப் 'பிடித்துவிட்டேன், பிடித்து விட்டேன்' என்று பிள்ளை விளையாடல் நிகழ்த்தும் போதும் நாம் சிரிக்கிறோம். புட்பகரண்டகத்தில் புகுந்து துறவியை விடுமாறு விடன் வேண்டும்போது 'அடே யான் ஆலோசித்துத் துணியும் அளவு நில் என்று துறவியிடம் சொல்கிறான் சகாரன். 'எவனோடு கடி ஆலோசிப்பது?" என்று விடன் கேட்க "என் நெஞ்சோடு ஆலோசிக்கிறேன்" என்று பதிலுரைக்கிறான். அவன் நெஞ்சமோ 'போகவும் வேண்டாம் நிற்கவும் வேண்டாம்' என்கிறதாம். நல்ல ஆலோசனை! நல்ல நெஞ்சம்! சாருதத்தனுக்கு இசையைக் கேட்டு அனுபவிக்கத் தானே தெரியும்; சகாரனுக்கோபாடவும் தெரியும் ஆனால், அவன் படுத்தும் பாட்டைப் பொறுத்துக்கொள்ளும் விடனால்தான் அவன் பாடும் பாட்டையுங் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியும் புட்பகரண்டகத்தில், அவ்ன் பாடத் தொடங்கும்போது 'தாங்கள் கந்தருவர் ஆயினர்கள்' என்கிறான் விடன். உடனே 'இன்னிசைக் குயிலினது இறைச்சியை உண்டேன். இன்னிசைப் பாடகன் ஆனேன் (VIII) என்று சகாரன் பெருமையோடு கூறுகிறான். நாம் சிரிப்பதோடு குயில்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கிறோம் சகாரன், தன் வண்டியில் முதலில் விடனை ஏறுமாறு வேண்டுவதும், அவ்வாறே விடன் ஏற "நீங்கள் நில்லுங்கள், உங்கள் அப்பனுடையதா இவ்வண்டி? நீங்கள் முன்னால் ஏறுகின்றீர்களே?' என்று கேட்பதும் வேடிக்கையாயிருக்கிறது. 'தாங்கள்தானே! அங்ங்ணம் கூறினர்கள்' என்று விடன் நினைவுபடுத்த 'யான் அப்படிக் கூறினாலும் பெருமான் ஏறுங்கள் என்று